#003
கம்மட்டிப்பாடம் என்று ஒரு மலையாலப்படம் பார்த்தேன். அறியப்பட்ட ஒளிப்பதிவாளர் ராஜிவ்ரவி இயக்கியிருக்கிறார். சமீபகாலங்களில் வரும் மலையாள படங்களின் தரம் ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் கதைக்களங்கள் மிக ஆரோக்கியமான ஒரு சிந்தணைச்சூழல் நிலவுவதைக் காட்டுகிறது.
கம்மட்டிப்பாடம் என்பது பழைய எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கிராமப்பகுதி. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறியப்படுபவர்கள் வசிக்கும் இடமாக காட்டப்படுகிறது. 1950 களில் கம்யூனிச ஆட்சியில் நிலமில்லாத எல்லா விவசாயிகளுக்கும், அளவுக்கதிகமாக நிலம் வைத்திருக்கும் நிலச்சுவாந்தாரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு நிலம் கொடுக்கப்பட்டது. அதில் இவர்கள் எளிய முறையில் விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். 1980-90 களில் வரும் சமூக மாற்றங்கள் பொருளாதார மாற்றங்கள் நிலுவையில் உள்ள மதிப்பீடுகளையும் மாற்றிப்போடுகிறது. அப்போது ஈளந்தாரியாக இருக்கும் சிலர் எளிய முறையில் விவசாயம் செய்து பிழைப்பதில் காட்டிலும் பெரும் முதலாளிகளுக்கும் கம்பெனிகளுக்கும் விசுவாசிகளாக இருப்பது தான் சாமர்த்தியம் என்று எண்ணியிருந்தார்கள்.
அப்படி ஒரு சிரிய அலவிலான கொள்கையுடன் சின்ன ரவுடித்தனங்கள் செய்துகொண்டிருக்கும் குழு பாலனுடையது (பாலேட்டன்). அவனது தம்பி கங்காதரன், அவனுடைய உற்ற நண்பன் கிருஷ்ணா இருவரும் பாலனின் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் காதலிக்கும் கம்மட்டிப்பாட பெண் அநிமோள். "நல்லாக வேண்டுமென்றால் இந்த ஊரை விட்டு போக வேண்டும் " என்று பாலனின் பெரியவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் அநிமோள் சொல்லுவாள் "நல்லாகவேண்டும் என்றால் எங்க இருந்து வேணுமானாலும் நல்லாகலாம்" என்று. ஆனால் கடைசியில் யாரும் நல்லாகவில்லை.
பெரிய கம்பெனிக்காரர்களுக்காக சொந்த இனமக்களுடைய நிலங்களையே கையகப்படுத்த பாலன் கேங்க் உதவி செய்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுகிறது. விற்கிறது. போட்டிகள் வருகின்றன. பகைகள் வளர்கின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். 1990 களில் எர்ணாகுளம் கொச்சி பெரிய நகரமாக உருவெடுக்கும் போது ஏகதேசம் பலநூற்றுக்கணக்கான விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டு தங்களது நிலங்களை பெருமுதலாளிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டி வந்தது. தாமாக முன்வந்தவர்களும் உண்டு. இல்லையென்றால் எல்லாவற்றையும் நேர் செய்ய பாலன் போல, கங்கா போல கிருஷ்ணன் போல பலரும் உண்டு.
இவர்கள் செய்யும் காரியங்களில் மனமுடைந்து பாலனின் மூத்தோர் மரணமாகிறார். அந்த மரணம் பாலனின் மனசாட்சியை அழுத்துகிறது. தனக்கு பிள்ளைகள் வாய்க்காமல் இருப்பதற்கு காரணம் மூத்தோர்களுடைய சாபமாக இருக்கும் என நம்புகிறான். அதீதமாக குடிக்கிறான். தனது குற்றங்களுக்கு பரிகாரங்களைத் தேடுகிறான். ஆனால் முதலாளிகளுடைய அகராதியில் அப்படிப்பட்ட இளகிய உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமில்லை. கோஷ்டிப் பகையின் காரணமாக பாலன் லாரி ஏற்றி கொல்லப்படுகிறான். கம்மட்டிப்பாடத்தின் நெஞ்சில் நேராகவந்து ஏரியது அந்த லாரி.
கிருஷ்ணனுக்கும் கங்காவுக்குமான நட்பில் விரிசல் ஏற்படுகிறது. கிருஷ்ணன் திருந்தி வாழ முடிவு செய்து பாலகுருஷ்ணன் டிரேவல்ஸ் என்று ஒன்றை நடத்தி வருகிறான். கங்கா இன்னும் கேங்க் வேலைகளிலேயே இருக்கிறான். இதற்கிடையில் பாலனை கொன்ற சதிகாரர்கள் யாரென தெரியவர கிருஷ்ணனும் கங்காவும் அவனை (ஜானி) கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்கள். குத்தியுரும் கொலை உயிருமாக அவனை விட்டு விட்டு கங்காவும் கிருஷ்ணாவும் தலைமறைவாகிறார்கள். கங்கா தான் திருந்திவாழ முடிவெடுத்திருப்பதாகவும் "ரேஷன் கடைக்கு சென்று அரிசி-மண்ணெண்னை வாங்கும்" ஒரு சாதாரணக்காரனாகவேண்டும் என்று சொல்கிறான். அநிமோளை தான் கல்யாணம் செய்ய விரும்புவதாகவும், நீ அவலை விட்டு விலகிவிடும்படியும் கேட்கிறான். அன்று இரவு கிருஷ்ணன் கங்காவை விட்டு தனியே செல்கிறான். அநிமோளுடன் ஓடிப்போக தயார் செய்துவிட்டு புறப்படுகையில் போலீஸ் குருஷ்ணனை கைது செய்கிறது.
பிறகு எந்தத்தொடர்பும் இல்லை. கங்கா அநிமோளை கல்யாணம் செய்து வாழ்கிறான். 12 வருஷம் கழித்து கங்கா பேசுறேன்னு....வந்த ஒரு தொலைப்பேசி அழைப்பில் கங்காவை யாரோ ஸ்கெட்ச் போடுவதாக தெரிந்து அவனைத் தேடி அவன் வசிக்கும் மும்பையிலிருந்து கிளம்புகிறான் கிருஷ்ணன். கங்காவுக்கு என்ன ஆயிற்று...கடந்த 12 வருடத்தில் கங்கா என்ன ஆனான், என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தான் என்று பலரது வாய்வழியாக அவனது கடந்தகாலம் தெரியப்படுத்தப்படுகிறது.
பெருமுதலாளிகளால் உருவாக்கப்பட கங்காக்கள் பிறகு அவர்களுக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் அபகரித்துக்கொடுத்த நிலங்களுக்கு மேல் இன்று ஒரு கொச்சின் சிட்டி நிற்கிறது. பழைய நினைவில் நெடுஞ்சாலைகளில் அலையும் பசுமாடுகளைப்போல கங்காக்கள் அந்த நகரங்களின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் தங்கியிருந்து அந்த நகரங்கள் எங்கும் வெறிநாயைப்போல சுற்றி வருகின்றார்கள். அந்த நகரங்களுக்கு இனியும் கங்காக்கள் அவசியமில்லை. அத்துமீறி வீட்டிற்குள் ஏறி வரும் வெறிநாயை என்ன செய்வார்களோ அதை தான் அந்த முதலாளிகள் அவனுக்கு வருத்தினார்கள்.
கங்காவாக வரும் விநாயகன், அவரது சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். எனக்குத் தெரிந்த, நான் பார்த்த ஏதேதோ மனிதர்களை கங்கா நினைவுபடுத்தினான். நான் கண்டு வளர்ந்த ஆக்கள் எல்லாம் கங்காவைப்போலவோ கங்காவின் தன்மை கொண்டவர்கள் போலவோ தான் இருந்திருக்கிறார்கள். மாறும் காலத்துடம் பிடி குடுக்கமுடியாமல் அலைக்கழிக்கப்படும் நாம் எல்லோரும் கங்காவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
இந்தப்படத்தில் வரும் ஒரு பாடல் இந்தப்படத்தின் மொத்த சாராத்தையும் தாங்கியுள்ளதாக இருக்கிறது. ஒரு மகனுக்கும், தந்தைக்குமான உரையாடலாக அந்தப்பாடல் இப்படி நீள்கிறது:
"...நாம் பொட்டிய பொக்காலிக்கர
எவிடேபோய் எண்ட அச்சா
நீ வாரிய சுடுசோர் ஒப்பம்
வெந்தே போய் நன்மகனே
ஆகாணும் மாமலை ஒன்றும்
நம்முடையதல்(ல) என்மகனே
ஈ(இந்த) காயல் கயவும் கரையும்
ஆருடயுமல்ல என்மகனே....
புழுபுலிகள் பக்கி பருந்துகள்
கடலானைகள் காட்டுருவங்கள்
பலகாலம் பரதெய்வங்கள்
புலையாடிகள் நம்மோடொப்பம்
நரகிச்சு பொருக்கிம்மிவிடம்
பூலோகம் திருமகனே
கலகிச்சு மரிக்கும்மிவிடம்
இகலோகம் எந்திருமகனே..."
சனி, 3 செப்டம்பர், 2016
கம்மட்டிப்பாடம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக