#013
நான் வழமையைப் போல பணிமுடிந்து எங்கள் அலுவலகம் இருக்கும் வளாகத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தேன். ஆட்டொவில் போவதா டேக்சியில் போவதா மின்ரயிலில் போவதா என்று முடிவெடுக்காமல் குழப்பத்தில் ஒரு ஆட்டொ ஸ்டேண்ட் அருகே நின்றுகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த பெண்மணி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு என்னை நெருங்கினார். ஒரு கைப்பையும் ஒரு உருட்டும் பெட்டியையும் வைத்திருந்தார். தலைமுடி ஸ்ட்ரெயிட்டனிங் செய்யப்பட்டிருந்தது. வேறு மாநில பெண்ணாக இருக்கலாம் என்று நான் ஊகித்துக்கொண்டிருக்கையில் அவராகவே "Do you speak english?" என்று கேட்டார். பல பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் வளாகம் அது. மிக்கவாரும் பட்டப்படியாவது முடித்திருக்கும் ஆட்கள்தான் அங்கு பணிபுரிவார்கள். அப்படியிருக்க அந்தப்பெண் அப்படி கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் "Ofcourse everyone does " என்றேன். தொடர்ந்து "what is your problem ?" என்றேன் சற்று எரிச்சலாக.
"I want to go to that big building in taramani. these guys are asking 200 Rs...they neither understand english or hindi" என்று ஆட்டொ காரர்களைப்பார்த்து சொன்னார். உங்களுக்கு எங்கு போகவேண்டும் என்று கேட்ட்டேன். அவர் மீண்டும் மீண்டும் ஒரு ஹோட்டலின் பெயரை சொல்லி "தரமணி" "பெரிய பில்டிங் " என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் இந்த இடம் புதுசு அம்மணி, நீங்கள்சொல்லும் இடம் எனக்கு விளங்கவில்லை என்று சொன்னேன். அவர் நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு , அதிகபட்சம் 100 ரூபாய் தான் வாங்குவார்கள் என்றார் . நான் கடைசியாக, சரி அந்த ஹோட்டல் முகவரி இருக்கிறதா என்று கேட்ட பொது அவர் உள்ளது என்று அவர் பையிலிருந்து முகவரியை நீட்டினார். அதில் அஸென்டாஸ் CSIR ரோடு என்று இருந்தது. அதிகபட்சம் 2-3 கிமீ இருக்கலாம். அவ்வளவுதான். 200 ரூபாய் மிகவும் அதிகம் என்று சொன்னேன். நீங்கள் டேக்சி பிடித்தால் கூட 100 ரூபாய் தான் ஆகும். அதை முயற்சியுங்கள் என்றேன். டேக்சி எதுவும் கிடைக்கவில்லை. எனது செல்பேசியில் முயற்சி செய்தேன் , பலனில்லை.
அந்த அம்மணி "நீங்கள் வேண்டுமானால் அந்த ஆட்டொ காரர்களிடம் முயற்சி செய்துபார்க்கிறீர்களா " என்கிறார்.
நான் இது என்னடா வம்பாக போய்விட்ட்து என்று நினைத்தேன். ரொம்ப டெலிக்கேட் சிச்சுவேஷன். ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசுவதெல்லாம் நமக்கு வராது. மட்டுமல்லாமல் ஆட்டோ என்பது சென்னையில் மாபியா மாதிரி. இதில் நாம் வக்காலத்துக்கெல்லாம் போக முடியாது "இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேல சாரு ... கம்மனு போ " என்று சொல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. கம்பளைண்ட் பண்ண முடியுமா இல்லை நடவடிக்கை தான் எடுக்க முடியுமா ஒன்னும் **** முடியாது. இன்றைக்கு ஏழரை தான் என்று நினைத்துக்கொண்டு "முயற்சி செய்து பார்ப்போம் வாங்கள் " என்று ஒரு ஆட்டொ டிரைவரை நெருங்கினோம்.
"அண்ணா, அஸென்டாஸ் வரைக்கும் போக எவ்வளவு " என்றேன்
நமது ஆட்டோக்காரர்கள் அவர்களுக்கேயான உடல்மொழியில் "என்பது ரூவா குடுங்க சார் " என்கிறார்.
எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த பெண்மணியிடம் "Give 80 Rupees " என்றேன். அந்தம்மாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அதற்குள் ஆட்டோக்கார ப்ரோ "...வாட் மேடம் ...பிபோர் டெல் நோ ? அஸென்டாஸ் " என்று ஒரு போடு போட்டார். அந்த அம்மணி "அச்சா ...இனிமேல் நான் இங்கு வருவதற்கு முன் மொதல்ல தமிழ் கத்துக்கறேன் ...பிளா பிளா பிளா " என்று குய்யா முய்யா என்று ஆரம்பித்தார்.
எனக்கு இதற்கொன்றும் நேரம் இல்லை. நான் "மேடம் ...உங்களுக்கு நீங்க கேட்டிட விலையில் ஆட்டு கிடைச்சதில்லையா. உதவி செய்ய ஒருவர் கிடைத்தார் என்று திருப்தியடையுங்கள். புகார் சொல்லாதீர்கள். நான் நாளைக்கு மும்பை போனாலும் எனக்கும் இதே கதிதான் ...எனக்கு ஹிந்தி தெரியாவிடடால் என்னை ஏமாற்றுவார்கள் ...நீங்கள் கிளம்புங்கள் " என்றேன்.
அந்தம்மா ஏதாவது சொல்லவேண்டும் என்பதற்காக "no no...in mumbai all autowalas speak both english and hindi " என்கிறார்.
சரி, பொய்த்தோலை என்று நினைத்தவாறு என்பிரச்சனைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.
***
இது எதோ premonition போல, ஓரிரு வாரங்களில் நான் மும்பை செல்ல வேண்டியதாகிவிட்ட்து. எந்த பிரச்சனைகளையும் தவிர்க்கும் பொருட்டு ஆட்டொவெல்லாம் நான் எடுக்கவே இல்லை. வெறும் Ola , Uber போன்ற டாக்சி சேவைக்களைத்தான் 2 நாளும் பயன்படுத்தினேன். 2 நாளில் ஒரு 10 டேக்சியாவது எடுத்திருப்பேன் . அந்த அம்மணி சொன்னது போல , ஆட்டொக்காரர்களை விடுங்கள் ஒரு கேப் டிரைவர்கு கூட ஆங்கிலம் பேசவரவில்லை. ஏன் பெரும்பாலும் ஆங்கில போர்டுகள் , முகவரிகள் கூட வாசிக்க வரவில்லை என்பது தான் உண்மை.
நான் அப்போது அந்த அம்மணியின் நம்பரை வாங்கி வைத்திருக்கவேண்டும் என்று விரும்பினேன்.
செவ்வாய், 13 செப்டம்பர், 2016
ஹமி ஹிந்துஸ்தானி ...
கருவகை: #365
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக