இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

புலன்களின் சாவி

புலன்களின் சாவி


காதலை வெளியே இறைக்கும் வாளி மனது

அதில் நிறைந்தும்...வற்றியவாறும்

முத்தங்களின் நினைவுகள்!


புலன்களின் சாவி

ஒற்றை முத்தத்தில் புதைந்திருக்கின்றது!

ஒரு பறவையின் மாந்தலைப் போல

ஒரு குழந்தையை முத்தமிடுகிறாய.

“குழந்தைகளுக்கு மட்டுமே

முத்தங்கள் இலவசமாக வழங்கப் படுகிறது!”


எல்லா காதல்களும்

ஏதோ ஒரு முத்தத்தைக் கொண்டே

நினைவு கூறப்படுகின்றன!


நான் உன் முத்தங்களுகான தருணங்களை

மிக பத்திரமாக சேகரிக்கின்றேன்…

நீயோ, அதை விரைவில் வழக்கொழியும்

ஒரு நாணையத்தைப் போல

மிக‌ அவசரத்துடன் செலவழிக்கிறாய் !


முத்தத்தை யாசித்துப் பெறுவதைக் காட்டில்

வன்மமானது என்ன இருக்க முடியும்


எதிர்பாராத ஒரு தருணத்தில்

எதிர்பாராத ஒரு நிலப்பரப்பில்

கட்டில்களிலிருந்து வெகு தூரத்தில்

பரிமாரப்படும் ஒரு முத்தத்தின் ஈரம்

பிரபஞ்ச துன்பங்களையெல்லாம்

துடைத்துவிட வல்லது!

***