இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 செப்டம்பர், 2007

சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்


இயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை.

~ நகிசா ஒஷிமோ

நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால்
அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது !.
இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!!

~ இந்த கட்டுரையை எழுதச்சொல்லிக் கேட்ட கௌதமன்


மீண்டும் கர்னாடகாவின் வட பகுதிதிகளை காணப்புறப்பட்ட ஒரு வார இறுதியில் வெளிநாட்டு சரக்கின் வருகைகளின் காரணமாக திட்டம் கைவிடப்படவே எனக்கு சற்றும் பிடிக்காத பெங்களூர் நகரில் சுற்றிவர நேர்ந்தது. ISKON போன்றவற்றை என்னால் ஆன்மிக ஸ்தலங்களாகப் பார்க்க முடியவில்லை.மாறாக அவை வர்த்தக நிறுவனங்கள் போலவே செயல்பட்டு வருகின்றன என்று கூறுவதே ஏற்புடையதாய் தோன்றுகிறது. ஆதனால் கடைசியில் வேறுவழியின்றி பூங்காக்களுக்கு வந்து சேர்ந்தோம்.

ஆண்கள் இங்கு செல்லக்கூடாது, பெண்கள் இங்கு செல்லக்கூடாது, என்று சில இடங்கள் இருப்பது போல...'ஆண்கள் மட்டும் செல்லக் கூடாது'...'பெண்கள் மட்டும் செல்லக் கூடாது' என்று சொல்வதற்கும் சில இடங்கள் உண்டு. ஊட்டி, திருச்சி மலைக்கோட்டை, பெங்களூர் லால்பாக் அவற்றில் அடங்கும். ஆமாம் இங்கு வருபவர்கள் எல்லாம் ஜோடிகளாகவோ, 'ஜோடிக்கப்பட்டோ' தான் வருகிறார்கள். கிடைத்த மர நிழலில், புதர் இடையில் புகுந்து கொள்கிறார்கள். நாளடைவில் இந்த புதர்கள், நிழல்கள் எல்லாம் நிறைந்துவிட்டதால் இந்த So Called காதலர்கள் அங்கிங்கெனாத படி எங்கும் நிச்சலன சுருதியில் சல்லாபித்து மூழ்கிக்கிடக்கிறார்கள். நகரத்துக்குள் இத்தனைக் காதல் ஒளிந்துகொண்டிருப்பதை அப்போது தான் கவனிக்க முடிகிறது. அவை நல்ல காதலா கள்ள காதலா என்பதெல்லாம் வேறு விஷயம். காதலையே கள்ளத்தனமாக பார்க்கும் இந்த சமூகத்தில் அப்படி பேதம் பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. அங்கு இரண்டு ஆண்கள் தனியாக செல்ல நேர்ந்தால் அருவருப்புடன் பார்க்கிறார்கள் (இல்லை நாம் அப்படி உணர்கிறோமா தெரியவில்லை). எங்களுக்கே ஒரு வித கூச்சவுணர்வு தோன்றிட தனித்தனியே உலாவச் சென்றோம்.

இந்தியாவின் Smooch, Forepalys எல்லாம் எவ்வாறு உள்ளது என்பதற்கு சில சாம்பிள்கள் இங்கு கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தன. தாங்கள் பார்க்கப் படுகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எவ்வித நாண உணர்வும் ஏற்படவில்லை.., எங்களுக்கும் தான். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.

நிறுவப்பட்ட கலாச்சார கற்பிதங்கள் புரையோடிக் கிடக்கும் சமுதாயத்தில் நடுத்தர மனமானது இவர்களைக் குற்றவுணர்வுடனோ, பாவஉணர்வுடனோ பார்த்து சுயகழிவிரக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, அதை ஒப்புக்கொள்வது தான். அவர்களின் குற்றவுணர்வுப் பார்வையை நிராகரிப்பது தான். காமத்தை மிருகப் பண்பாக உருவகப் படுத்தி, அதிலிருந்து மனிதனை விடுவிப்பதாய் அவதானிப்பது என்பது சமுதாயத்தின் நீண்டகால முயற்சியாகவே இருந்து வருகிறது. அதில் தொடர்ந்து தோற்றும் வருகிறது.

நகரம் இத்தனைக் காதலால் நிரம்பியிருக்கிறதா என பிரம்மிக்க வேண்டியதாய் இருக்கிறது. இன்னமும் எத்தனையோ காதல்கள் ஏதேதோ நூலகங்களிலோ, பேருந்துகளிலோ, மூத்திரச்சந்துகளிலோ ஒளிந்துகொண்டிருக்கிறது. அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் சொல்லக்கேட்டது இங்கு 'கூட்டிக்கொண்டு' வருபவர்கள் அதிகமாகிவிடுவதால் இது வரவர விபச்சாரத்திற்கான இடம் போல ஆகிவிட்டது என்று சலித்துக்கொண்டார். அதனால் அவ்வப்போது போலீஸ் ரோந்துகள் கூட நடப்பதாக கூறினார்.

அந்த வெளி சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பாலியல் சுதந்திரத்தின் குறியீடாகவே பட்டது. வயதின் உடல்த்தேவையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற அறியாமை அனைவரது செயல்களிலும் வெளிப்படுகிறது. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிலிருந்து, இந்த மாதமோ அடுத்தமாதமோ மாதவிடாய் நின்றிவிடக்கூடிய அபாயமுள்ள பெண்கள் வரை இங்கு இதே கதிதான். இந்த லால்பாக் கூட்டத்தில் பல்தரப்பட்ட வயதுகளில் கணவன் மனைவியாக இருப்பவர்களும் உண்டு. கட்டுக்கோப்பான குடும்பக் கட்ட‌மைப்பு அவர்களை நான்கு சுவ‌ருக்குள் நடப்பதை நாலுபேர் முன் நிகழ்த்த சபித்திருக்கிறது.

பொதுவாகவே நாட்டில் இந்தமாதிரி கலாச்சார பிரச்சனை என்றாலோ, பொருளாதார பிரச்சனை என்றாலோ உடனே ஐ.டி மக்களை நோக்கி ஒரு கும்பல் பாயும். ஞாயம் தான்! நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது. இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்!! . ஐ.டி மலர்ச்சி ஏற்பட்ட 90களில் பெங்களூர் நகரத்தின் இலக்கணம் இது தான். ஒவ்வொரு தெருவிலும் கண்டிப்பாக இருக்கக்கூடியது: ஒரு விநாயகர் கோவில், ஒரு டீக்கடை மற்றும் ஒரு Software Company என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கும் மக்கள் விகிதாசாரத்தில் அவர்களின் சந்தேகம் ஞாயமானதே. அப்படிப்பட்டவர்கள் கவனத்திற்கு: இந்த மாதிரி இடங்களில் காணப்படுபவர்கள் ஐ.டி/BPO க்காரர்கள் அல்ல. ஐ.டி/BPO பேச்சுலர்கள் எல்லாம் ரூம் போட்டு விடுகிறார்கள். பெண்கள் கூத்து அதைவிட. நான் பெங்களூரில் வசித்து வந்த போது நண்பர்களாக இருந்த Call Taxi டிரைவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வார இறுதிகளில் 4 அல்லது 5 பெண்கள் ஒரு Call Taxi யை வாடகைக்கு எடுத்துக்கொண்டு எங்காவது 3 அல்லது 4 மணி நேரம் போகும் தூரமுள்ள இடத்திற்கு போகச்சொல்கிறார்கள். போகும் வழியில் வண்டியிலேயே மது, சிகரெட், கூச்சல், கொச்சையாடல்கள் என அரங்கேறும். ஒடுக்கப்பட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடே அவை. பின் திரும்பி வருவத்ற்குள் எல்லம் அடங்கிவிடும். மீண்டும் அடுத்த வாரங்களில் க்கு ஃபோன் செய்து அதே டிரைவர்தான் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் ஏதாவது புறநகர் பகுதிக்கு சென்றுவிட்டு அரை நளுக்கும் மேலாக காணாமல் போய் விடுவார்கள். "நீங்கள் வேணும்னா ஏதாவது சவாரிக்கு போரதுன்னா போயிட்டு வாங்க.." என்று நல்லெண்ண யோசனைகள் வேறு தருவார்கள். மட்டுமல்லாது இந்த டிரைவர்களுக்கு டிப்ஸ் மட்டுமே சிலசமையம் 500 ஐத் தாண்டிவிடுமாம். எல்லாம் நாம் யூகிப்பது போல ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதரணமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான். நான் அங்கலாய்பு தாங்காமல் "தமிழ்ப் பொண்ணுகளுமா.." ன்னு கேட்டேன். Localite களாக இருப்பதால் கன்னடப் பெண்கள் மட்டும் தான் கொஞ்சம் குறைச்சல் என்கிறார்கள்.



So லால்பாக் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கும் IT/BPO வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் ஐ.டி வளர்ச்சிக்கும் டிரைவர்களின் குழந்தைகள் CONVENT டில் படிப்பதற்கும் மறைமுகமான சம்மந்தம் இருக்கலாம். இப்படிப்பட்ட வரையறுக்க முடியாத உறவுகொண்ட நிகழ்வுகளின் Phenomena வைத்தான் Butterfly Effect, Chaos Theory என்றெல்லாம் சொல்கிறார்கள்.

Back to லால்பாக்:

மாலை 4 மணியிருக்கும் நாங்கள் முழுதாக ஒரு சுற்றினை முடித்து ஒரு மரத்த‌டடியில் வந்தமர்ந்தோம். அருகிலிருந்த பெஞ்சில் நீண்ட நேரமாக அந்த இளைஞன் அந்த பெண்ணை தூண்டுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தான். அவளும் மறுதலித்துக் கொண்டிருந்தாள். இது வெகு நேரமாகவே நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவள் தன்னை ஒப்புக் கொடுத்தவள் போல தன் மடியில் அவனைக் கிடத்திவிட்டாள். அங்கிருந்து நகரமுடியாத படிக்கு, என் நண்பனோ அப்போது பார்த்து அலுவலக அழைப்பை செல்பேசியில் Attend செய்துகொண்டிருந்தவன், அப்படியே மடிக்கணிணியை எடுத்து மறுமுனையில் இருப்பவருக்கு விளக்கம் சொல்லத் துடங்கிவிட்டான்.

இதற்கிடையில் அந்த ஜோடி நல்லதொரு மோனத்தில் கலந்துவிட்டிருந்தனர். அப்போது அங்கு விசில் கொடுத்தபடி போலீஸார் கொச்சையாக சத்தமிட்டபடி வந்தனர். உட்கார்ந்திருந்த எல்லா ஜோடிகளையும் விலகிப்போகச் செய்தார்கள்.

போலீஸ் அருகில் வந்துவிட்டபோதிலும் எங்கள் அருகில் இருந்த ஜோடிகள் சுதாரித்துக் கொண்டு எழமுடியாத சங்கமத்தில் இருந்தார்கள். போலீஸ் அவர்களை நோக்கி லத்தியை விட்டெறிந்தான். அந்த இளைஞன் சட்டென விலகி நடக்கத்துவங்கினான். அந்தப் பெண் இன்னும் அதே இடத்தில் தான் இருந்தாள். அருகில் வந்த போலீஸ் 'வேசி' என்னும் பொருள் படும் வார்த்தையில் திட்டினான். அந்தப்பெண் எழுந்து வேறு திசையில் சாவுகாசமாக நடக்கத்துவங்கினாள், புன்னகைத்த படியே... 'இது எப்பவும் நடப்பது தானே' என்ற நீதியில் இருந்தது அவளின் தோரனை.

போலீஸ் என்ற அதிகாரத்தின் கட்டமைப்பு நிகழ்த்திய ஃபாசிசத்தின் கட்டவிழ்ப்பு அங்கு நடந்தேறியது. இது நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகிக்க வைகிறது. நாய்கள் புணர்கையில் கல்லைவிட்டு எறியும் இழிசெயல் போன்றது இது (இத்தனைக்கும் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டு தானிருந்தார்கள்). நமது சமுதாயத்தின் அழுகிப்போன இந்த சித்தரிக்கப்பட்ட சித்தாந்தத்தின் நாற்றமெடுப்பு சகித்துக் கொள்ள முடியாத ரீதிக்கு ரூபமெடுத்துவிட்டது.

இந்த சமுதாய...கலாச்சார மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள உதவ வேண்டிய ஊடகங்களோ அதை மறைபொருளாக வியாபார ரீதியில் பணமக்கவோ... அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தவோ உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிறது. நகிசா ஒஷிமோ என்ற ஜப்பனிய இயக்குனர் சொல்வதைப்போல "வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்". இதை என்று நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்??

எழுத்து - ஓவியம்

ப்ரவீன்

18 கருத்துகள்:

  1. Mr.Prawin,

    Good usage of words and I liked the topic.But banglore is not as bad as you say (Both of my sisters are studying there). Dont accuse without knowing well. I think you have exaggerated everything for the sake of interest.

    -Komalanathan.

    பதிலளிநீக்கு
  2. கோமளநாதன்...
    //Good usage of words and I liked the topic//
    Thanks a lot.

    //But banglore is not as bad as you say //
    இங்கு பெங்களூர் என்பது ஒரு குறியீடே ஒழிய This is a Universal phenomena.
    //(Both of my sisters are studying there). //
    நான் பத்தாம்பசலையாக எல்லோரையும் சொல்லவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் என்றே குறிப்பிடுள்ளேன். எனக்கு மட்டும் அந்த அங்கலாய்ப்பு இல்லையா என்ன...

    //Dont accuse without knowing well. I think you have exaggerated //

    இதில் மிகைப்படுத்தல் எதுவும் இல்லை. நான் பெங்களூரில் ஒரு சாதாரண அடிப்படை தொழிலாளியாக வாழ்ந்தவன். என் அனுபவங்களையே நான் பகிற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. Praveen!
    Good writeup.
    முன்னமே சொன்னமாதிரி நல்ல் சொல்லாடல்கள், ஒப்பீடுகள்...
    //டிரைவர்களின் பிள்ளைகள் conventல் படிப்பதற்கு வேண்டுமானால் தொடர்பு இருக்கலாமே ஒழிய//
    good one.
    Continue this!
    Hope you have seen the மடைதிறந்து remix!
    Excepting a Blog on your views about it!

    Regards
    Venkatramanan

    பதிலளிநீக்கு
  4. Thanx for the comments….

    Mdaithirandhu remix is great one… One of my hitlist songs.
    It is by yogi-b and I ve become a great fan of Yogi-B.

    Ya as ur perceived…I have planned to write a Blog over it...Soon

    பதிலளிநீக்கு
  5. Prawin,

    My name is komalavalli..I m the youngest sister of Komalanathan(he has commented before). I just wanted to clarify few things.My brother told me to study this article as he wants me to be a cultural-hermit in this modern world.But do you really think, it is possible in today's bangalore??I dont think so. Who knows? I might be your insipiration,if you had seen me in the bangalore parks with my boy friends! Life is short , enjoy it most is my policy! Coming back, I have seen your reply to my brother's comment also..All are nothing but crock of shit.. Why you both guys are worrying abt the girls? Did at any time we worry abt the way boys live? why அங்கலாய்ப்பு ? Is it becos you (you - all boys) are unable to lay girls easily or is it becos you cannot control girls?? " When the shit hits the fan, some people run and some people face the fire..What kind are you?" . Lastly, I want to speak with your sister or Girl friend, if you have one.

    -With Luv,
    Komalavalli.

    P.S: I believe that you will publish my comment intatc. Orelse, I will have to start MUNKURIPPUKAL.BLOGSPOT.com for your pinkurippukal.blogspot.com!

    பதிலளிநீக்கு
  6. hi praveen

    dhairiyamaana post , gautham asked me to read this , u didnt inform me , ok povatum

    neenga indha post i or topic i s.ra paaniyil (elarum ipaiye solraangala) or ilakiya thamilil neenga eludhiyadhal than ellarum padika mudinjadhu illaina romba kochiayya irundhu irukum

    பதிலளிநீக்கு
  7. A very daring Write-up! Good work Praveen. Entire flow of the article is too good especially the tamil words you have used for its english alternatives.....

    And Man, ur paintings rock! I request you to put the meaning of the first picture in your post.


    //"வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்"//

    From the entire article i thought u were against the social nastiness (Lalbagh), but at the end you have mentioned like this.One help, i need the motto of ur article in one line(preferably english, pls)

    My point of view: I second Praveen. I have seen Lalbagh as how you have mentioned. And about dogs and Software Engineers I would want to add one more to Bangalore- Pubs! Hope this will answer Komalanathan and Komalavalli's comments.Whatever u have mentioned in the article is right
    I have two thoughts.

    1. When such a thing(smooch or whatever) happens in foreign countries its not a big deal. Everyone minds their own business, because its a part of their culture. American culture has started entering India but not captured completely.Maybe after many decades people will not consider such activities as a big deal.

    2. But now, in public places where families and KIDS come this is a total nuisance. The people who are indulged in such activities have to be penalysed as they teach the KIDS.Same happens in Marina too...

    பதிலளிநீக்கு
  8. கார்திக்,

    என்ன இது?...உங்களுக்கு inform பன்னலன்னு கோச்சுடிருக்கீங்க... என்னோட முந்திய பதிவுகலை எல்லம் நான் சொல்லும் முன்னே படித்துவிட்டு கமென்ட் போட்டுடுவீங்க. எனக்கும் inform பன்ன கொஞ்ச‌ம் டைம் குடுங்க :). மேலும் உங்களைப் போல தீவிர வலை‍ பயணிகளிடம் ஒரு ஆர்டிகிள் அவ்வள‌வு எளிதாக தப்பிவிட முடியுமா என்ன?

    எல்லோரும் என் 'தைரியத்தை' பாராட்டுறாங்க... உண்மையில், தேவை தைரியம் இல்லை. உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனசாட்சி.. இது எல்லோருக்குமே அவசியமான ஒன்று.அது இருந்தா போதும்.

    அப்புறம் நீங்க திரும்பத் திரும்ப எஸ்.ரா மாதிரி எழுத்துன்னு சொன்னா நான் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. நல்ல தமிழில் (அ) இலக்கியத் தமிழில் (உங்களைப் பொருத்த மட்டில்) எழுதுவது எஸ்.ரா பாணி என்றால்... நீங்கள் இன்னும் அனேக நவீன எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும் என்று உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் கார்திக்.

    பதிலளிநீக்கு
  9. @Anurdha

    // But now, in public places where families and KIDS come this is a total nuisance. The people who are indulged in such activities have to be penalysed as they teach the KIDS.Same happens in Marina too...
    //

    What do you say anuradha...? I just dont see the connection! U meant to say that there is no families and kids in foreign countries?? illa avanga yaarum beechukkku varathu illanu solreengalaa?

    //I would want to add one more to Bangalore- Pubs! Hope this will answer Komalanathan and Komalavalli's comments//
    No. It didnt answer! Can you be more specific??

    Regards,
    Komalavalli.

    பதிலளிநீக்கு
  10. அப்புறம் நீங்க திரும்பத் திரும்ப எஸ்.ரா மாதிரி எழுத்துன்னு சொன்னா நான் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. நல்ல தமிழில் (அ) இலக்கியத் தமிழில் (உங்களைப் பொருத்த மட்டில்) எழுதுவது எஸ்.ரா பாணி என்றால்... நீங்கள் இன்னும் அனேக நவீன எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும் என்று உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் கார்திக்.//

    kandippa padikirane

    anal es ravai nan padithavan enabdhal than appdi sonanne

    oru velai ungaluku theriyalao avaru unga eluthil olinju irukiradhu

    or neenga ungalukunuu oru style vachi irukeenga nu solreengala
    or

    es ra mariye irundhu pogatum unakenna nu ketkureengala :)

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் எஸ்.ரா வைப் படித்தவராக இருக்கட்டும் கார்த்திக். ஆனால் உங்களால் எஸ்.ரா வை (அல்ல வேறு எவரையோ) சரியாக உள்வாங்கிகொள்ள முடிகிறதா என்பது தான் கேள்விக்கு உரியது. அது அல்லாமல், இவர் அவரைப் போல எழுதுகிறார் என்று யவரும் சொல்வதற்கில்லை. எஸ்.ரா மிக மென்மையாக எழுதக்கூடியவர். என் எழுத்தில் கோபம் இருக்கும், வலி இருக்கும். படிப்பவர்களிக்கு அது உணரமுடிகிறது. இந்த உணர்வு எஸ்.ரா படிக்கும் போதும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.



    நான் படிக்கக்கொடுத்த 'நெடுங்குருதி'யை நீங்கள் படித்துவிட்டு 'கிலைமாக்ஸ்' சொதப்பீட்டாருங்க என்று சொன்ன உங்களால் சரியாக எஸ்.ராவின் அல்ல வேறு எவரின் உணர்வுப் பூர்வமான எழுத்துக்களை புரிந்துகொள்வது சிரமம்.



    என்னுடைய ஒரு நண்பனிடம் இதே போல் 'நெடுங்குருதி'யைக் கொடுத்திருந்தேன். வெகுநாளாக வரவில்லை. ஒரு நாள் வெட்கத்தைவிட்டு நான் கேட்டுவிடவே, அவர் "சிரமத்துக்கு மன்னிச்சுக்கோங்க... நான் ஒரு வாரத்துக்கு முன்னாடியே முடிசுட்டேன். ஒரு அத்தியாயம் தான் பாக்கி இருந்தது. எங்கே படிச்சுமுடிசுட்டா தீர்ந்து போயுடுமேன்னு இன்னும் அப்ப்டியே வைசுட்டேன்னு" சொன்னார். "சரி உங்க இஷ்டப்படி குடுங்க இல்ல குடுக்காம போங்கன்னு" சிரிச்சுட்டு வந்துட்டேன். அதை மேலும் ஒருவாரம் கழித்துதான் கொடுத்தார்.



    ஒரே எழுத்தின் இரண்டு பார்வைகள் எப்படி இருக்கிறது பாருங்கள்...



    " நான் உலகை சற்று விஸ்தாரமாகப் பார்கிறேன் என்றால்
    நான் பெரும் ஜாம்பவான்களின் தோள்களின் மேல் நிற்பதால்"

    ~ இது ஐசக் ந்யூட்டன் (கார்த்திக், இவர் விகடனில் எழுதுவதில்லை! ).


    என்னுள் எஸ்.ரா ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றால், உங்களால் அவரை மட்டும் தான் அடையாள‌ம் காண முடிந்திருக்கிறது. என்னுள் ப்யூகோவ்ஸ்கியும் ஒளிந்திருக்கிறார், டிகின்ஸ் ஒளிந்திருக்கிறார், நிசிம் எசக்கீல் ஒளிந்திருக்கிறார், கேத்தி ஏக்கர் ஒளிந்திருக்கிறார், நீட்சே ஒளிந்திருக்கிறார்.ஆனாலும் நான் என் தனித்தன்மையை இழப்பதில்லை

    Finallaa ஒரு Quote..

    "Everything is not what you want to see..if you want to see what you want, better change your specs" Friedrich Nietzsche
    (இவரும் தான்)

    Open to Further Discussion...

    பதிலளிநீக்கு
  12. @Anuradha

    //"வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்"// From the entire article i thought u were against the social nastiness (Lalbagh), but at the end you have mentioned like this.One help, i need the motto of ur article in one line//

    You have got it exactly. This is what I am talking about. “You (means society) certain things as offensive by just hiding it” which is not necessary. The best way to eradicate that is to accept it. Avoid the guilt feeling of it. I want to correct you I am against “Social Nastiness” and not against “Nastiness in the Public”. My concern is there is no social place to express their love. Every where lovers (need not be necessarily) are looked upon with a guilt look, which is a cultural sickness, which needs to be cured. And the cure is just having it more, which is happening and will happen more.

    //1. When such a thing(smooch or whatever) happens in foreign countries its not a big deal. Everyone minds their own business, because its a part of their culture...//

    What is this ____ . Why is this non-secularism? If a white can smooch, why do you think an Indian shouldn’t?. the foreign countries you say “it is not a part of their culture. No greek culture or Romanian culture says that “You people under my regime are privileged to kiss their girl friends in public places and others are welcomed to stand and listen, if they wish”. They have accepted it, that’s it. One Question? Moreover what is happening in the most cultural bound India. Highest rape cases, illegal affair cases, followed by murders, Child abuse cases, India is one of the toppers. That too among the Women abuse cases and Rape and Rape-murder cases filed in India 40% is filed in tamilnadu, which is one of the most so-called orthodox people. You can’t see such a numeros in France or Germany.

    // American culture has started entering India but not captured completely //

    American culture has entered India –you say. Let it be. You ppl started wearing american kind-of outfits, hairstyles, lipstiks, shoes, drinks everything. But you wanna avoid the most necessary change.

    // Maybe after many decades people will not consider such activities as a big deal//

    If something can be right 10 years after, why shouldn’t be right now?. Let India get the “First Movers Advantage” which it lost to make up in many other fields.

    //The people who are indulged in such activities have to be penalysed as they teach the KIDS. //

    Exactly. We need to educate the KIDS. The society spoiled is spoiled. Next generation is what we need to concentrate upon. If you say like this, why are we stressing the importance of Sex education in schools? it is the responsibility of the current generation and they are perfectly doing it. Moreover Children learn faster than their parents.
    //Penalysed// Under what section?? I don’t see a difference between the policeman I ve mentioned and this Statement

    பதிலளிநீக்கு
  13. @Komalavalli

    //U meant to say that there is no families and kids in foreign countries?? illa avanga yaarum beechukkku varathu illanu solreengalaa?//

    Family and kids are very well there in foreign countries too. BUT they are used to such activities from AGES. Where as in India the culture is slowely spreading. Ma'am r u ready to relate current India with current America? There is a wide differcence between cultures betweeen the two.

    ***//I would want to add one more to Bangalore- Pubs! Hope this will answer Komalanathan and Komalavalli's comments//****
    //No. It didnt answer! Can you be more specific??//

    If you did not understand through that let me xplain. Pubs in Bangalore are in more and more number than in Chennai.PUBS means not 'whisky shop'. It is a place where young minds(both guy and girl) plan to spend time half-dressed just for the sake of it or for time-pass. And remember they are drunk when they dance. Again this culture is popular in US. Dont ask me again if they can do why cant we. I am not against the US culture. MY POINT IS CURRENT INDIA IS NOT CURRENT AMERICA. India will take some time(or decades) to cope up or accept that. Again in India itself one place is not like the other.

    Needless to say if people(young or teens) go to pubs and spend their time and money then imagine their
    growth.They would prefer to spend a weekend in a different pub than making ways to complete their graduation( a basic qualification). You and me can sit and debate, think about the ones at college who are most indulged in such activities.

    பதிலளிநீக்கு
  14. //My name is komalavalli.
    Nalla mangalagaramana peyar

    //I m the youngest sister of Komalanathan
    Aiyo paavam

    //I might be your insipiration,if you had seen me in the bangalore parks with my boy friends
    boy friends? plural? then its not you.

    //Life is short , enjoy it most is my policy!
    Defenitely.For bad people,(parks with plural boy/girl friends)Life will be very Short.i have seen in TV about AIDS adv.

    //Why you both guys are worrying abt the girls?
    Whats it to you?

    //Is it becos you (you - all boys) are unable to lay girls easily or is it becos you cannot control girls??
    Bad Girls can be controlled easily.i have seen many in b'lore parks.

    //Lastly, I want to speak with your sister or Girl friend
    Please,for god' sake,Leave them. avangaladhu nalla irukkattum.

    //With Luv,Komalavalli
    Praveen,beware..

    //I will have to start MUNKURIPPUKAL.BLOGSPOT
    No one will read even if you start munkurippugal or side kurippugal

    PS:Why so much anger.Each and every one has their own right to express their views. Praveen havent mentioned anywhere that girls should be like this or that or any rules. its just his view. if you want to take it ,take or else leave it. and ia have seen many incidents as described above in parks.

    பதிலளிநீக்கு
  15. Praveen Continue your journey.....
    and always we will be with you....

    //My name is komalavalli…… sari adhukku

    //I m the youngest sister of Komalanathan…… irukkatum kandippa nallavarthan

    //I might be your insipiration,if you had seen me in the bangalore parks with my boy friends…… ada yennama periya varthayellam pesittu

    //Life is short , enjoy it most is my policy!....... monthly premium evalvo………

    //Why you both guys are worrying abt the girls?............not them all the boys will..and have to….

    //Is it becos you (you - all boys) are unable to lay girls easily or is it becos you cannot control girls??.......... well said…that’s y some of them called as adangaapidaari

    //Lastly, I want to speak with your sister or Girl friend………Prechana unakkum enakkumthan y calling them…… only nattamai to pangali…. Pangali to nattamai

    //With Luv,Komalavalli…… Nalla soninga

    //I will have to start MUNKURIPPUKAL.BLOGSPOT…….Nalla arambinga naanga vena gold spot companyla sponser vangi tharom

    Idha parumma thangachi……. Unma ennikume kasakkum adha Praveen sonna mattum enna inikkava seyum……..

    பதிலளிநீக்கு
  16. @Arun
    Hey Arun, are you a lost world freek or what? whats wrong with you man??
    Anyway, you started something ...let me reply in the sameway...

    //Nalla mangalagaramana peyar - thanks for the complement..I ll try my best to convey your thanks to my dead grand pa...becos he was the one who christened me...

    //I m the youngest sister of Komalanathan
    Aiyo paavam//
    Hey, dont shower all your emotions only one me...Becos I m sure that komalanathan is not the unique name..If you try u can find more komalanathans..avangalukkaahavum konjam varuthapadunga..

    //I might be your insipiration,if you had seen me in the bangalore parks with my boy friends
    boy friends? plural? then its not you. //
    I just rolled on the floor laughing at this..Neenga ethukkum prawinoda article etha pathinnu avartayavathu kettu therinjukkunga..

    //Life is short , enjoy it most is my policy!
    Defenitely.For bad people,(parks with plural boy/girl friends)Life will be very Short.i have seen in TV about AIDS adv.//
    Aaann..choleetaaaaruruyaa dharmadurai...

    //Why you both guys are worrying abt the girls?
    Whats it to you???///
    whats it to you if I ask him something ?

    //Is it becos you (you - all boys) are unable to lay girls easily or is it becos you cannot control girls??
    Bad Girls can be controlled easily.i have seen many in b'lore parks.//
    Have you been to "Bad Girls Control Police Academy" ??

    Oh..I forgot to check the author name of the book "why bad girls cannot be controlled?"... was it you???


    //With Luv,Komalavalli
    Praveen,beware..//
    Take that advice praveen..someone here told that you are the mr.universalhandsome..So, learn how to handle pnymphomaniac girls!!
    Ada pongapaaa...ungalukku rombathaan thamaasu..

    //I will have to start MUNKURIPPUKAL.BLOGSPOT
    No one will read even if you start munkurippugal or side kurippugal//
    This "no one" counts only you and bala (the another idiot)??

    ///PS:Why so much anger.Each and every one has their own right to express their views. Praveen havent mentioned anywhere that girls should be like this or that or any rules. its just his view. if you want to take it ,take or else leave it. //
    This particular thing just made me look like a crazy lady..Man, i love your comedy sense...neenga ezhuthunathaye konjam maathi kuduthurukken...Why so much anger.Each and every one has their own right to express their views. Praveen havent mentioned anywhere that girls should be like this or that or any rules. its just MY view . if you want to take it ,take or else leave it.

    //i have seen many incidents as described above in parks./// neenga lalbagh watch manaa??

    Regards,
    Komalavalli...

    பதிலளிநீக்கு
  17. @Bala,

    Your comment is not worthy of replying..I m sorry.Try something else..

    How about the job of Insurance agent? you were keen in knowing the premium and all!! Try that job man..

    Regards,
    Komalavalli...

    பதிலளிநீக்கு
  18. hi guys,
    Komala, Arun, Bala..

    I encourage the discussion, but not on one another. I think we are diverting from our focus of what we started discussing.

    As agreed by all of you every one haveright to express your views.

    EaCH one of us may not agree with the other's opinion. But we should learn to respect other's views.

    Only that acccetance will lead to the proper culture that we were talking aBOUT.

    Any how thanks all for the healthy discussion.

    பதிலளிநீக்கு