எல்லாம் ஒரு பத்து வருடம் இருக்கும்!
கடைசியாக ஒரு தபால் அட்டையில் யாருக்கு கடிதம் எழுதுனீர்கள்?
வெள்ளை ஜீன் அனிந்த மனிதரை சமீபத்தில் யரேனும் கண்டீர்களா?
'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்ற தூர்தர்ஷன் பலகையை கண்டு
உச் கொட்டியது கடைசியாய் எப்போது?
சஃபாரி சூட் அணிந்து விழாக்களுக்கு வரும்
வி.ஐ.பி-களை இப்போதும் காண்பதுண்டா?
சமீபத்தில் ஒரு STD பூத்தில் சென்று
மெல்லிய குரலில் யாராவதோடு பேசினீர்களா?
தந்திவந்திருப்பதாக கையில் ஒரு சீட்டுடன்
உங்கள் வீடுதேடி பதட்டமாக ஓடி வந்த பெண்மணியை நினைவிருக்கிறதா?
கடைசியாய் எந்த சினிமாவின் ஒலிச்சித்திரத்தை வானொலியில் கேட்டீர்கள்?
கோலப்பொடி விற்பவன், அரப்பு விற்பவள்,
மரத்தூள் விற்பவனெல்லாம் இப்போது உங்கள் தெருவில் வருவதுண்டா?
மிடி மற்றும் டிஷர்ட் அணிந்து வரும் அதிநவீண பெண்ணை
கடைசியாய் எந்த சாலையோரம் கண்டீர்கள்?
கடைசியாக சாப்பிட்ட பம்பாய் மிட்டாய்
என்ன உருவம் கொண்டிருந்தது?
நீங்கள் தானம் கொடுத்த பத்து பைசாவை வாங்கிக்கொண்டு
'மகராசனா இரு' என்று வாழ்து பெற்று எவ்வளவு வருடங்கள் இருக்கும்?
இனியும் பத்து வருடம் கழித்து இதுவும் கவிதையென எடுத்துக்கொள்ளப் படுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக