குற்றம் ஏதும் செய்யாத போதிலும்
எப்போதும் சந்தேகிக்கப் படுகிறான்
நகரவாசி
நள்ளிரவில் சைரன் ஒலிகளும் ரோந்து விளக்குகளும்
அவனுக்கு அச்சவுணர்வை ஏற்படுத்துகின்றன
உள்ளாடைகளைக் களையும் போதுகூட
யாரும் தன்னை கவனிக்கவில்லையென சரிபார்த்துக்கொள்வதை
தவிற்க முடிவதில்லை
பேருந்தில் அருகில் அமரும் பெண்ணுக்காய் அச்சப்படுகிறான்
அவளது அந்தரங்கத்தில் தீண்டிவிடக்கூடிய தனது கை-க்காக
பரவசத்துடன் காத்திருக்கிறது மொத்தப் பேருந்தும்!
மிகுந்த தயக்கத்துடன் ஆணுறை வாங்குவதற்காய்
விபச்சாரத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறான்!
மேலும்
பிச்சை போடுவதற்காகவும்..
கோவிலுக்குப் போவதற்காகவும்..
தாடி வளர்த்துக்கொள்வதற்காகவும்..
வலதுகையில் கடிகாரம் அணிவதற்காகவும்..
ரப்பர் செருப்பு அணிவதற்காகவும்..
பெட்டிக்கடையில் பாக்கு வங்குவதற்காகவும்..
சிவப்பு மேல்சட்டைஉடுத்துவதற்காகவும்…
சந்தேகிக்கப்படுகிறான்!
நகரத்தின் இரு கண்கள்
உங்கள் அந்தரங்கங்களில் ஊடுறுவி பாய்கின்றது
உங்கள் படுக்கையறைகளில்
புகைப்பட கருவிகளை வைக்கிறது
அது உங்கள் வாதங்களை கேட்க தயாரில்லை
ஏனெனில் நகரதிற்கு கண்கள் மட்டுமே உண்டு
காதுகள் இல்லை!
ரொம்ப அருமையாக இருக்கிறது. ப்ரவீன்....
பதிலளிநீக்குநகரத்தின் கண்கள், நோய்வாய்ப்பட்டது... சிலசமயம் குருடாக நடிக்கவும் செய்கிறது.
கவிதைக்கு வாழ்த்துகள்!!
//ஏனெனில் நகரதிற்கு கண்கள் மட்டுமே உண்டு
பதிலளிநீக்குகாதுகள் இல்லை!
//
ரொம்ப நல்லா இருக்கு
A Good one.
பதிலளிநீக்குGautam.
நம்மை நடிகர்களாகவும் ஆக்கி விடுகிறது
பதிலளிநீக்குarumai nanba arumai
பதிலளிநீக்குNandri makkaley
பதிலளிநீக்கு