நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார். 'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு !. நான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு !).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்!. அது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ; புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !. ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ? இதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்
::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::
(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)
லட்சியமாவது புடலங்காயாவது..
சுகமாக,சந்தொஷமாக,நிம்மதியாக வாழனும்..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. "
இது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...!!
'ரஜினி' என்ற பெயரே எனக்கு "இது எப்படி இருக்கு?" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.
மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.
அந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த
பின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.
ஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்
கணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை
வெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.
தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்;
இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி
சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்
'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.
வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.
ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?
என்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு
காந்த்தோ...M.G.R.ரோ..வேறுயாரோ எல்லோருக்கும் பொருந்தும்.
ஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த
எந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்
செய்துள்ளது!.
இவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை
அனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.
ரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவரின் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY
புத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே
மேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி
செய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.
ரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்
ஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்
வரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்
புத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க
வேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.
தமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்
ஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி
அணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்
சினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்
கொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்
வைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்
பிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்
பார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்
அரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.
( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்
கூறியதை நினைவுக்கு வருகிறது "ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்" என்றார்.அதனால்
சினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு
ரஜினியே நல்ல உதாரணம்.
ரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது!. பழைய ரஜினி படங்கள்
(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு
போட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்
இருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று?
ரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்
நிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...
சில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்!!.
ரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...
இது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...
இந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....
என் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...
ஹை பிட்சில் பாடல் ஒலித்தது...
"விடுகதையா உன் வாழ்வே...!
விடை சொல்லுவார் யாரோ...!! "
ப்ரவீன்
/*
பதிலளிநீக்குசில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்!!.
*/
Can u provide those hidden informations, atleast for me. I am a sincere Rajini fan.
pls correct the spelling mistakes praveen.
பதிலளிநீக்குpiditha vishayangalai pathivu panni vechikanum... munaa ellam diary ippo blog... :D very nice narration
பதிலளிநீக்குhi praveen, nice work.... small correction...updates are overloaded here..why dont you separate these things under a small links with given titles..for ex: u can give each separate titles like cinema, arasiyal, kavithaikal, oviyam...just like that...its easy for the viewers to read. its my opinion...anyway u have done a excellent job. "vaanaanthiri" is a nice title.. better to give a small explanations about the title at the begging if u wish...then the home page looks very neatly.aarthi karthikeyan
பதிலளிநீக்குThanks aarthi...
பதிலளிநீக்குகோட்டோவியம் அருமை பிரவீன்
பதிலளிநீக்கு// சினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு ரஜினியே நல்ல உதாரணம்.//
பதிலளிநீக்குஅப்படி இல்லை.பெருந்தலைவர் காமராஜ் அவரர்களுக்கு பிறகு தமிழகத்தில் MGR ஆட்சியே சிறந்ததாக இருந்ததை பிறர்சொல்ல நாம் அறியமுடிகிறது.அத்னால் ஒருவரது தொழிலை வைத்து அவரது திறமையை எடைபோடுவது சரியில்லை.அதிலும் இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறை(வாரிசு)அரசியல்வாதிகலைவிட ரஜினிக்கு அடித்தட்டு மக்களின் நிலை நன்றாகவே தெரியும்.அதனால் அவர் வந்தாலும் தவறில்லை.
// ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்
இருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று? //
இது எனக்கும் இருக்கு எப்போதான் திருந்துவாங்ளோ.
குறைந்தபட்சம் நானாபடேகரைப்போல் நடித்தால் கூட தேவலாம்.
நல்ல ரசிக்கும் படியான ஓவியம் பிரவீன்.
ரஜினி என்ற மனிதரை புறக்கணிக்கமுடியாது என்பதை ஒப்புகொள்கிறேன்!
பதிலளிநீக்குஆனால் அவரது வளர்ச்சிக்கு இதுவரை காரணமாக இருந்த தன்னம்பிக்கை இப்போது இல்லை என்பது எனது கருத்து!
rajani kanth.......... is ........... rajani kanth.............
பதிலளிநீக்கு