நிலவின் பின் பக்கத்தை
ஏன் யாரும் ரசிப்பதே இல்லை ?
காதலியின் கோபத்தை
ஏன் யாரும் சகிப்பதில்லை ?
அலாரம் அடிக்கும் முன்னே
அம்மா ஏன் எழுந்து கொள்கிறாள் ?
பள்ளிக்கூட கடைசி மணி
ஏன் மிக வேறுமையாய் உள்ளது ?
கல்லறைப் பூக்கள்
ஏன் சிரிப்பை மறந்து விடுகிறன ?
கடற்கரை காதலர்களுக்கு
ஏன் மணல் சுடுவதே இல்லை ?
சண்டையிட்ட நண்பர்கள்
ஏன் மண்ணிப்பு கேட்பதே இல்லை ?
பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?
கழுதை ஏன் பாடுவதே இல்லை ?
பாரதி ஏன் இறந்து போனான் ?
அடுத்த ஊருக்கு வழியனுப்பினாளும்
ஏன் அழுகிறாள் தாய் ?
ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
இறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ?
'ஔவை' -யை ஏன்
ஒ-ள-வை என்று நாம் படிப்பதில்லை ?
காதலி ஏன் கண்பார்த்து அழுவதில்லை ?
கண்விழிக்கும் போது மட்டும்
ஏன் இரவு நீளமாய் உள்ளது ?
அலாவுதீனின் விளக்கை
இப்போது யார் வைத்திருக்கிறார்கள் ?
நாம் ஏன் இன்னும்
கேள்விகேட்டுக்கோண்டெ இருக்கிறொம் ?
ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !
-2005
புதன், 23 ஆகஸ்ட், 2006
நெடுங்கேள்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
// ஓளிந்து கோண்டே வந்த பஸ் பயண பெண்மணி
பதிலளிநீக்குஇறங்கியவுடன் ஏன் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் ? //
ஒருவேள நீங்க அந்த பொண்னுக்கு ரன் மாதவன் மாதிரி தெரிஞ்சிருக்கலாம்.
// பொய் சொல்லும் கவிஞனை
அவன் அம்மா தண்டித்திருப்பாளா ?//
பதில் சொல்லுங்க கவிஞரே
// ஆமாம்...
நீங்கள் ஏன் இன்னும் கவிதை படித்துக்கொண்டே இருக்கிறீர்கள் ? !//
அப்பீட்டு