இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 6 மார்ச், 2010

நிசி அகவல்!

துடைக்கப்படாத முத்தத்தின் ஈரங்களுடன்
உறங்குகிறது பல்வேறு வயதில்
குழந்தைகள்

பெண்ணின் அர்காஸ்மிக் குரலில்
ஊளையிடுகிறது நள்ளிரவில்
நாய்

எவனோ ஒருவன் டாஸ்மாக் வாசலில்
‘கட்டிங்’கிற்கு ஆள் சேர்த்துக்கொண்டிருக்கிறான்

அணைக்கப்படாத தொலைக்காட்சிகள்
மூடிய ஜன்னல்களின் மேல்
ஒளிநடனம் போடுகின்றன

திறந்தவெளியில் கதறியோடும்
பைத்தியக்காரனைப் போல
சஞ்சரிக்கும் நிம்மதியற்ற நிலவு

எவனோ வீடுமாறி
கிடந்து உறங்குகிறான்
எவளோ ஒருத்தி
எவனுக்கோ துரோகம் இழைக்கிறாள்

இரண்டாம் ஆட்டம் முடிந்து இம்முறையும்
அதிருப்தியுடன் திரும்புகிறார்கள்
தம்பதியினர்கள்

எல்லாம் கண்டபடி
தூங்காது விழித்திருக்கும்
இரவின் இருகண்கள்...

நித்தியமாய்…
நிச்சலனமாய்…
நிலைகொண்டிருக்கும்…
எப்போதும்
நடுநிசி!

5 கருத்துகள்:

 1. //திறந்தவெளியில் கதறியோடும்
  பைத்தியக்காரனைப் போல
  சஞ்சரிக்கும் நிம்மதியற்ற நிலவு//

  நில‌வு ம‌ன‌நிலைக்கு ஏற்ப‌ என்ன‌ன்ன‌ சேதிக‌ளை சொல்லி அட‌ங்குது.

  ந‌ல்ல‌ க‌விதை. வாழ்த்துக‌ள். நிறைய‌ எழுதுங்க‌ள்

  பதிலளிநீக்கு
 2. //இரண்டாம் ஆட்டம் முடிந்து இம்முறையும்
  அதிருப்தியுடன் திரும்புகிறார்கள்
  தம்பதியினர்கள் //

  இதுல ஏகப்பட்ட அர்த்தம் இருக்கும் போல இருக்கே!
  உயிர்மையில் கவிதை வெளி ஆனதிற்கு வாழ்த்துகள் பிரவீன்!

  பதிலளிநீக்கு
 3. //துடைக்கப்படாத முத்தத்தின் ஈரங்களுடன்
  உறங்குகிறது பல்வேறு வயதில்
  குழந்தைகள்
  //திறந்தவெளியில் கதறியோடும்
  பைத்தியக்காரனைப் போல
  //
  நண்பா அருமை!கவிதைக்கான படத்தேர்வும் அழகு !

  உயிரோசையில் கவிதை வெளியானதற்கு என் வாழ்த்துகள் !!!

  -கெளதம்.

  பதிலளிநீக்கு
 4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  பதிலளிநீக்கு