(காணாமல் போய்விட்ட ஷானுவின் கடிதங்களுக்காக...)
உலகில் கடைசி மனிதன்
உயிரோடு இருக்கும் வரையில்
கவிதை வாழும் !
கவிக்கோ ~ அப்துல் ரகுமான்.
மறுதலிக்கப் பட்ட சம்பாக்ஷனைகளின் விளைவாக தனிமையில் பேசுதல் என்ற வசதி ஏற்படுகிறது. தனகுத்தானே பேசுதலின் ஒழுங்குபெற்ற வடிவமே கவிதை என்கிறார் மனுஷ்யபுத்திரன். தனித்து பேசும் கலாச்சாரம் அதிகரித்துவிட்ட ஒரு சமூகத்தில் கவிதையின் அத்யாவிசயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவெனொருவனில் இருந்தும் ஒரு கவிஞன் பிரசவிக்க ஆயத்தமாகவே இருப்பதாகவே தெரிகிறது. வரும் காலங்களில் 'கவிஞன்' என்னும் பெயர்ச்சொல் மறைந்து போய் 'கவிதை' மட்டுமே நிலைபெற்றிருக்கும் என்றே தெரிகிறது. . .காற்றைப் போல!
************************************************
1.உடல் பெருத்தவர்கள்
==================
உடல் பெருத்தவர்கள்
பெரும்பாலும் பொதுவிருந்துகளில்
குறைவாகவே சாப்பிடுகிறார்கள்
வேறு யாரும் முந்திக்கொள்ளும்
முன்பே தங்களைத் தானே
எள்ளிக்கொள்வது சௌகரியமாகவும்
பாதுகாப்பானதுமாக இருக்கிறது
பள்ளியிலோ கல்லூரியிலோ
தாங்கள் ஒரு தடகள வீரராக இருந்ததை
அடிக்கடி நண்பர்களிடம்
நினைவுபடுத்துகிறார்கள்.
அவர்கள்
ஆயத்த ஆடை கடைகளுக்கு
செல்வதை தவிர்த்து விடுகிறார்கள்.
"அந்த லாஸ்ட்டு ரேக்ல பாருங்க" என்ற
புறக்கணிப்பை தவிர்ப்பது கூட
அதிகம்
ஒரே மாதிரி
கருத்த ஆடைகளையே அணிகிறார்கள்.
தாங்கள் துவங்கப் போகும்
காலைஓட்டத்தைக் குறித்தோ,
சேரப்போகும் முதல் ஜிம் நாளையோ
எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்
ஷேர் ஆட்டோவில் 2 இருக்கை;
சொகுசு பேருந்தில் இரட்டைக் கட்டணம்
செலுத்தச் சொல்வதற்கான ஆபத்தை எதிர் நோக்கி
பதட்டத்துடன் காணப்படிகிறார்கள்
இந்தக் கவிதைக்குப் பின்
கண்ணாடி முன் செல்ல நேர்கையில்
"நம்ம அப்படியொன்றும் குண்டாக இல்ல"
என்று சொன்னாலும் சொல்லலாம்.
*************************************************
2. குறைந்தபட்சம்
================
ஒரு கவிதை எழுதுவதற்கு
குறைந்தபட்சம் ஒரு சிகரட் அவசியப்படும் என்றால்
இந்த பிரபஞ்ச கவிதையின் எண்ணிகையில் ஒன்று
குறைவாகவே இருக்கட்டும் !
ஒருமணி நேரம் நண்பனிடம் பேச
பாருக்கு தான் போகவேண்டுமென்றால்
அன்று மௌனவிரத நாளாகவே
இருந்துவிட்டுப் போகட்டும் !
என் பிறந்த நாளை நினைவுபடுத்த
கண்டிப்பாக ஒரு புது சட்டை வேண்டுமென்றால்
அந்த வருடத்திற்கான வயது அதிகரிக்காமலே போகட்டும் !
இரவு உறக்கம் கொண்டுவர
தாயின் அரவணைப்போ
காதலியின் முத்தமோ தேவைப்படுமெனில்
அது மற்றும் ஒரு உரக்கமற்ற இரவாகவே இருக்கட்டும் !
ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!
*************************************************
3. ஒவ்வொருமுறையும்
====================
நீ சரிசெய்து விடும்வரை
நான் சத்தியமாய் அறிந்திருக்க வில்லை
உன் முந்தானை சரிந்திருந்ததை !
*************************************************
4.
நிச்சயிக்கப் பட்ட
உன் விடுமுறை நாட்களில்
என் நிலைக் கண்ணாடிகளுக்கு
வேலை இருப்பதில்லை
என் உடைகளும் கூட
என் நிர்வாணத்தின் பொருட்டல்ல
உன் கண்களை முன்வைத்தே
தேர்ந்தெடுக்கப் படுகிறது...
உன்னில் காணும் என்னைவிட
எப்போதும் அழகாய் காட்டிவிடாத
என் கண்ணாடியை வெறித்தபடி நான்
உனதாகிவிட்ட என்னுடைய தினங்களை
நெற்றி மேல் ஒரு கற்றை முடியைப் போல
அழகாய் ஒதுக்கிவிட்ட படி நீ !
*************************************************
5.
அனைவரையும் அனுப்பிவிட்டு
மூச்சுவிட்டபடி வகுப்பறை இருக்கைகள்
எதிர்எதிர் பெஞ்சில்
கண்களையும் கண்களையுமே பார்த்து விளையாடும்
வினோத பால்யம் வாய்க்கப்பட்டவர்களாய் நாம்
முதலில் கண்சிமிட்டுபவர்கள்
தோற்றுவிட்டதாய் நாமே வரையறுத்துக்கொண்ட
கண்துடைப்பு விதிகள்
முதலில் நீ தோற்றுவிட்டால்
வெட்கத்தில் நீயும், வெற்றியில் நானும்
நான் தோற்பின்
குற்றவுணர்ச்சியில் நானும், பொய்கோபத்தில் நீயும்
காக்கைகளும் கரைய எத்தணிக்காத
அந்த சலனமற்ற மதியங்களில் நீயும் நானும்
இருவருக்கும் நடுவில்
படிக்கக் கொண்டுவந்த புத்தகமும்
காற்றில் படபடத்தபடி!
*************************************************
6. தனிமையில் பேசுபவர்கள்
=======================
உனக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை
தனிமையில் பேசுபவர்கள்,
பேச ஆளற்றிருப்பவர்கள் வார்த்தைகள்
கவிஞனுடையதைவிட தேர்ந்த ஒன்றாக இருக்கிறது
வெறுமையின் நாவுகள் வழியாக
உமிழ்கிறது யாருக்கும் அற்ற கவிதைகள்
பேச ஆள்தேடி அலைவதைக் காட்டில்
இது அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது
அறைந்து சாத்தும் ஜன்னல்கள் கூட
புறக்கணிப்பையே நினைவுபடுத்துகின்றன
அந்தி இருளத்துடங்கும் வானில்
கூட்டம்விட்டுத் தொலைந்த
ஒற்றைக் காக்கையின் கரைதல் சத்தம்
அழுகையைக் கூட்டுகிறது
இதையத்தின் நீள்சுவர்களில்
எதிரொலிக்கும் அந்த பெருத்தகுரல்
என்னை எவ்வளவு பலவீனப் படுத்துகிறது தெரியுமா
உனக்கு தெரிந்திருக்க ஞாயம் இல்லை!
************************************************
7.
என் கவன ஈர்ப்பு தீர்மாணங்கள்
தோல்வியைத் தழுவுகையில்
உன் விரல் ஸ்பரிஸங்களில்
முறியடிக்கிறாய்......
என் நம்பிக்கையில்லா தீர்மாணங்களை!
************************************************
8.
கவனித்திருக்கிறாயா...
நாம் எவ்வளவு நெருக்கத்தில்
நடக்கும் போதும்
தொட்டுக்கொள்வதே இல்லை!
உன் காரணமற்ற விலகுதலுக்கும்
கேள்விகளில்லா நெருக்கத்திற்கும்
நான் பழக்கப் பட்டவனாகவே இருக்கிறேன் !
எவ்வளவு பெரிய ஜன நெருக்கடியிலும்
சிரமம் இல்லாமல் உன்னைக்
கண்டுகொள்ள முடிகிறது
என்னால்..
என்னை உனக்கும்!
மற்ற அழகிய
பெண்களைப் பற்றிய பேச்சின்போது
உன்னுடைய முகச்சுழிப்பு
நான் எதிர்பாராரதாக இருக்கிறது!
நம் சந்திப்புகளின் நடுவேகடக்கும்
நண்பர்களைக் கண்டு நீ பதட்டப்படுவது
எனக்கு அவமான உணர்வை ஏற்படுத்துகிறது...
நம் உரையல்களின் நடுவே...
குறுக்கிடும் செல் அழைப்புகளை
நீ செல்லமாய்த் துண்டிப்பது
எனக்கு கர்வத்தை அளிக்கிறது !
அடுத்த முறையாவது
நீ நிராகரித்த,
காதல் கடிதங்களைப் பற்றி
பேசுகையில்
என் கண்களைப் பார்த்து பேசு !
நான் எப்போதாவது
வாங்கிக்கொடுக்கும் மிட்டாய் உறைகளை
சேகரிப்பதை இன்றோடு நிறுத்திக்கொள்!
நான் இன்னும் உனக்காய்
கரடி பொம்மைகளைத் தேடி சேகரிக்கிறென்...
உன்னுடைய எதிர்பார்ப்பு
ஒரு பூங்கொத்தாக இருக்கிறது!
என்னை உன் கனவுகளில்
என்னைக் கண்டிருந்தாலும்
என்னிடம் சொல்லாதே...
என் இரவுகளின்
உன் வாயில்களை நான்
என்றோ அறைந்து சாத்திவிட்டேன்!
விரைவில் நாம்
பரிமாரிக்கொள்ளும் செய்திகள்
முன்பெதையும் விட
துக்ககரமானதாக இருக்கக் கூடும்...
நான் கவிதைகளில் நாட்டமில்லாத
ஒருத்தியுடன் உடன் போக்கு கொள்கிறென்!
நீ எனக்கு முகம் தெரியாத ஒருவனுடன்
திருமணம் செய்துகொள் !!
*************************************************
உணர்வுகளை நானும் உள்வாங்கிக் கொண்டேன். குறைந்தபட்சம் என்ற கவிதையில்
பதிலளிநீக்கு//ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!//
என்று நீங்கள் உணர்வுகளை மரியாதை செய்யும் விதம் மிக அற்புதம். நேர்த்தியான ஒரு போதனை என்று சொல்லாம்.
//நான் கவிதைகளில் நாட்டமில்லாத
பதிலளிநீக்குஒருத்தியுடன் உடன் போக்கு கொள்கிறென்!
நீ எனக்கு முகம் தெரியாத ஒருவனுடன்
திருமணம் செய்துகொள் !!
//
:)))
கவிதைகள் அத்தனையும் நல்லாயிருக்குன்னு சும்மா ஒரு வார்த்தை கமெண்டுல முடிச்சுட்டு போற அளவுக்கு இல்லாம ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லாம போனா நான் இந்த பதிவ படிக்கவே இல்லைன்னு அர்த்தமாகிடும்.
எனக்கு பிடிச்ச கவிதை வரியில இன்னொன்னு..
//ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!
//
அன்பு எதையும் எதிர்பார்க்காதுன்னு சொல்றது பொய்ங்கறத ரொம்ப எளிமையாக்கியிருக்கு உங்க வரிகள்..
எழுத்துப்பிழைகளை கலைந்து விட முயற்சி செய்யுங்கள். கவிதைகளை இன்னும் சிறப்பானதாக காட்டும்.
பதிலளிநீக்கு(தொந்தரவு தரும் கருத்துக்கு மன்னிக்க :( )
Maps..
பதிலளிநீக்குKavidhai ellam nalla irukku.
mrs.saraswathi unga naankkula kudi irukkanga(kavidhai ku ellam kadavul avanga thana?)
tamil la enakku avlo knowledge ella.nerya kavidhai ku meaning purila.. :-( room la enaku puriya vechudunga.apram idha vida theliva comment eludharen
And regarding the initial post,
kooda irukum podhe phone la pesuradhu: even i am like that :)
And fat aguradha pathina lines (aiyayo,confirmed ah naan than
adhu)
ipdi pottu kuduthutingale
கருத்துக்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக எழுத்துப் பிழைகளைத் திருத்தி கொள்ள முயற்சிக்கிறேன்..
பதிலளிநீக்கு@ Arun,
பதிலளிநீக்குஅருண் மாப்பி... 'உடல் பெருத்தவர்கள்' கவிதை எல்லா விதத்திலும் எனெக்கும் பொருந்த வாய்ப்பிருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்.
அந்தி இருளத்துடங்கும் வானில்
பதிலளிநீக்குகூட்டம்விட்டுத் தொலைந்த
ஒற்றைக் காக்கையின் கரைதல் சத்தம்
அழுகையைக் கூட்டுகிறது
அறைந்து சாத்தும் ஜன்னல்கள் கூட
புறக்கணிப்பையே நினைவுபடுத்துகின்றன
I am happy to see you have Returned back to your Innocence..
Manikanda Rajan Sa
//சேரப்போகும் முதல் ஜிம் நாளையோ
பதிலளிநீக்குஎதிர் நோக்கி காத்திருக்கிறார்கள்//
idhu nichayama enna pathina dialogue thaana?
good ones Praveen....i expected ur own sketches for the Kavidhais...
அருணின் தாக்கம் ஆரம்ப வரிகளில் :):)
பதிலளிநீக்குஎன்னை சட்டென ஈர்த்த முத்துக்களில் மூன்று!
ஒவ்வொரு முறையும்:
என் பெண்தொழிகளிடம் நான் குறிப்பும் ஒரு விஷயம். அது ஒரு ஆண் மகனை காயப்படுத்தும் தருணம்.
மதியங்களில் நீயும் நானும்:
கல்லூரி படம் தோற்ற இச்சமுதாயம் அறியாத ஒரு அழகான ஒரு காட்சி..எனக்குள் ஒரு பாடல் காட்சியே திரைஓடியது..
கவனித்து இருக்கிறாயா:
காதல் தோல்வியுற்றோருக்கு சிறு வலியை, ஞயாபக படுத்துதலையும், குறுநகையையும் கொடுக்கும்.
மாற்ற முத்துக்களை பற்றி நண்பர்கள் முன்பே உச்சிமுகர்ந்து விட்டார்கள்...
ஒரு சிறு விண்ணப்பம், தயவு செய்து கவிதை எழுதுவதையாவது குறைத்துக்கொள்ளுங்கள்...ஏனெனில் அதை வைத்து பிழைப்பையும் புகழையும் பெறுபவர்களுக்கு நிச்சயம் பெரும்தடயாய் இருப்பீர்!
திறமைகள் கொண்ட ஒருவனை அச்டாவதானி என்று அழைப்பார்கலேயானால் அதற்கும் மேல் கொண்டவனை பிரவீன் என்று அழைக்கலாம்...
//ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
பதிலளிநீக்குகொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..!//
// என் கவன ஈர்ப்பு தீர்மாணங்கள்
தோல்வியைத் தழுவுகையில்
உன் விரல் ஸ்பரிஸங்களில்
முறியடிக்கிறாய்......
என் நம்பிக்கையில்லா தீர்மாணங்களை! //
எல்லா வரிகளுமே அருமைங்க.
அற்புதமான படைப்பு
தொடர்ந்து எழுதுங்கள் பிரவீன்.
@பாலா.
பதிலளிநீக்கு//ஒவ்வொரு முறையும்:
என் பெண்தொழிகளிடம் நான் குறிப்பும் ஒரு விஷயம். அது ஒரு ஆண் மகனை காயப்படுத்தும் தருணம்.//
உண்மை பாலா... நேர்மையான ஆண்மகனை ஒவ்வொருமுறையும் காயப்படுத்தும் சம்பவங்களில் ஒன்று. பலரும் வெளிபடுத்த நினைக்கும் செய்திதான். அதன் நேரம் இந்த வரிகளில் வந்து உட்கார்ந்து கொண்டது.
நண்பர்களை மட்டுமல்லாது அவர்கள் புலன்களையும் புரிந்து கொள்ளக்கூடிய அதிர்ஷ்டம் வாய்த்த நண்பர்கள் எத்தனையோ தெரியாது.
//மதியங்களில் நீயும் நானும்:
கல்லூரி படம் தோற்ற இச்சமுதாயம் அறியாத ஒரு அழகான ஒரு காட்சி..எனக்குள் ஒரு பாடல் காட்சியே திரைஓடியது..
//
"அந்த பெஞ்சுக்கு நடுவால பேப்பர பறக்க வுட்டீங்க பாருங்க...அடடா....அருமைங்க "ன்னு நீங்க 'குசும்'பியதை நான் இன்னும் மறக்கலை... :)
//உனக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை
பதிலளிநீக்குதனிமையில் பேசுபவர்கள்,
பேச ஆளற்றிருப்பவர்கள் வார்த்தைகள்
கவிஞனுடையதைவிட தேர்ந்த ஒன்றாக இருக்கிறது
வெறுமையின் நாவுகள் வழியாக
உமிழ்கிறது யாருக்கும் அற்ற கவிதைகள்//
ninaivin sumaigalai(?) arumaiyai irakki irukiraai Prawin!!!
Arumayaana kavithaigal!!
பதிலளிநீக்குUngaloda veechu romba athihamaa irukku..Neenga engayo iruka vendiyavar..eppa padam edukka poreenga??
--Saithai Thamilarasi
Hi Praveen..
பதிலளிநீக்குWonderful kavidhai..
The 2nd one " குறைந்தபட்சம்" is superb.. especially as all said
"ஒரு புன்னகைக்காக ஒரு வழியலும்
கொஞ்சம் அன்புக்காக அதிக கீழ்படிதலும்
ஒரு சிறு தலையசைப்புகாய் நீண்ட காத்திரிப்பும்
அவசியம் வேண்டுமென்றால்...
வேண்டவே வேண்டாம்...
யாரொருத்தியின் அன்பும்!
எவெனொருவனின் ஆதரவும்..."
very well said..
keep on movin.. Good Luck..
//என் கவன ஈர்ப்பு தீர்மாணங்கள்
பதிலளிநீக்குதோல்வியைத் தழுவுகையில்
உன் விரல் ஸ்பரிஸங்களில்
முறியடிக்கிறாய்......
என் நம்பிக்கையில்லா தீர்மாணங்களை//
நல்லா இருக்குங்க :)