இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஆகஸ்ட், 2007

பத்துப்பாட்டு1 - த‌னிமையாள‌ன் by AKON

AKON (Mr.Lonely) - த‌னிமையாள‌ன்

'பத்துப்பாட்டு'ன்னு சொன்ன உடனே பதறியடிச்சுறாதீங்க...

எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தமிழ் தெரியாது. இது நான் அடிக்கடி கேட்கும் பத்து இசைக்கலைஞர்கள் பற்றிய குறிப்பும், அவர்களது மிகப்பிடித்த பாடலின் அலசலும்...அவ்வளவே. மற்றபடி இவர்களை நமது இசைக் Copier களுடன் (Composer-கள் அல்ல‌) நிலைதூக்கிப் பார்க்கவோ, அல்லது அவர்களது அப்பட்டமான ஈ அடிச்சான் காப்பிகளை தோலுரிப்பதோ என‌து நோக்கம் அல்ல‌.

Frankly Speaking எனக்கு நல்ல ஆங்கிலப் பாடல்கள், இசைஞர்கள் Mc. Rajan மூலமாகவும், Mary Pearl மூலமாகவும் தான் அறிமுகம். Mc. Rajan அறைக்கு செல்லும் போதெல்லாம் 'உனக்குப் பிடிக்கும் பாரேன்'ன்னு பல‌ பாடல்களைப் போட்டுக் காட்டுவான்.Mary திடீரென்று குறுஞ்செய்தி அனுப்பி இந்த பாட்டு அந்த டி.வி-ல ஓடுது பாத்தியா என்பாள். சில நேரம் பாடலை ஒலிபரப்பவிட்டு செல்பேசியில் கவனிக்கசெய்வாள். இசை ரசனையில் பால்பேதம் இருக்க வாய்ப்பில்லை என்று நான் realize செய்தது அவர்களிடம் தான். கொச்சையாக பெண்களை மையப்படுத்தி வையும் சில‌ Rap பாடல்கள் கூட அவளுக்கு பிடித்திருக்கிறது, என்பது அதிர்ச்சியடயவைக்கும் அவளது முதிர்ச்சியயைக் காட்டுகிறது. அவர்கள் பரிந்துரைத்ததில் பல காட்டுக்கத்தல்கள், கடுமையான கெட்டவார்த்தைப் பாடல்கள், உருக்கும் மெலடிகள் எனப் பலதும் இருக்கும். அதில் எனக்கு மிக நெருக்கமான பாடல்களையே கேட்கிறேன்.

முதலில் Akon. இவரது முழுப் பெயரை எழுதவேண்டுமானால் கண்டிப்பாக நமது school register -களிளோ அல்லது அலுவலக படிவத்திலோ இடம் பத்தாது. முழுப்பேர் "Aliaune Damala Bouga Time Puru Nacka Lu Lu Lu Badara Akon Thiam". அதாவது ஒரு நெரிசலான செனகல் தெருவில் இவரை அப்படியே பேர் சொல்லி அழைத்தால், "என்ன சார்... கூப்பிட்டீங்களா ன்னு" ஒரு பத்துபேராவது திரும்பிப்பார்க்கக் கூடும். எதற்கு வம்பு... நாம் Akon என்றே அழைப்போம்.
செனகல் நாட்டில் 1973ல் பிறந்த இவர், 2004ம் ஆண்டு வெளிவந்த Locked Up இசைக் கோர்வையால் (Album) உலகுக்கு அறியப்பட்டார். பின் வெளிவந்த Konvicted இசைக்கோர்வைக்காக உலகில் இசைக் கலைஞர்களால் சிம்மசொப்பணமாகக் கருதப்படும் Grammy விருதைப் பெற்றார். அமரிக்காவின் Billboard Hot 100 வரிசையில் இவரது 18 ஹிட்டுகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் Billboard Hot 100 வரிசையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் ஒருங்கே 2 முறை பிடித்த பெருமை இவரை மட்டுமே சாரும்.

எனக்கு Akon-னில் மிகவும் பிடித்தமானது அவரது முதல் இசைக்கோர்வை Trouble லில் வந்த Lonely பாடல்.

பொதுவாகவே Akonனின் பாடல்கள் ஒரு மெல்லிய சோகத்தையும், ஆற்றவியலா துயரத்தையும் கொண்டே இருக்கும். தனது பிரிந்து போன காதலியின் துயரம் தாளாது அரற்றும் இந்த Lonely பாடல், காதலர்கள் உலகில் காலங்கள் கடந்து நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும், நம்ம ஊர் "காத்திருந்து...காத்திருந்து..." போலவோ அல்லது "ராசாத்தி உன்ன..." போலவோ.

(இது அந்தப் பாடலின் தமிழ் Version
நல்லா இருந்தா தமிழாளுமை... Not upto the Mark ன்னா சோதனை முயற்சி)

த‌னிமையாள‌ன்
------------------------

நடு நிசியில் விழித்துப் பார்த்தேன்
என்னருகில் நீயில்லை
கனவில்லை என்று நம்ப முடியாமல்
நடக்கத் துடங்கினேன்

புலம்பக்கூட யாருமின்றி என்னுள் நானே கதைக்கிறேன்
உனைச் சரணடைய என்ன புரியலாமென்று நினைக்கிறேன்

எல்லாம் சரிசெய்யவே நினைக்கிறேன்
ஏனெனில்...நீ சென்ற பின்னே வாழ்கை
நின்றே விட்டதடி பெண்ணே !

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்
நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

என் கனவில் பெட்டகமாய் ஒரு பெண்ணிருந்தாள்
நான் க‌டிந்த‌ போதும், ஒடிந்து விடாத‌ ம‌ல‌ர‌வ‌ள்
அவ‌ள் என்னை வில‌கி ஒளிந்து விடுவாள்
அவ‌ளைத்தேடி நான் தெருவோர‌மாக‌ அலைவேன்
என்ப‌தை என்னால் க‌ற்ப‌னை கூட‌ செய்ய‌ முடிய‌வில்லையே !

என்னை மகிழ்ச்சியில் திணற வைத்தவளே
இன்று அரற்ற வைத்துவிட்டாயே...
இனி உன்னை ஒரு நோடி நேர‌ம் பிரிந்தாலும்
என் உயிர் க‌டிகார‌ம் ஓடாது!

உன் விளையாட்டு போதும் பெண்ணே - வந்து
வீடு சேர‌டி க‌ண்ணே!!!

நானொரு த‌னிமையாள‌ன்.
என்னவளென்று எண்ணிக்கொள்ள
யாரிருக்கிறார் சொல்

நீ விலகிய‌ என் வானில் ஏதடி அழகு
நீ இன்றி அமையாது என் உலகு !

- என்று புலம்பித்தள்ளுகிறார்.

என்ன காட்டுக்கத்தல்களுக்கு நடுவேயும் ஏகோனின் பாடல்கள் மெல்லிய மெலடியை தன்னகத்தே கொண்டிருக்கும். அனைவரும் சென்று விட்ட அலுவலக பொழுதுகளில் முழுஓசையுடன் lonely இசையையே கேட்க விரும்புகிறேன். அது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

Mc.Rajan "இந்தப் பாடல் அப்படி ஒன்னும் Special கிடையாது... ஒருவேளை இந்தப் பாடுக்கும் உனக்கும் நிறைய ஒத்துப் போதல் இருகிறதால உனக்கு Specialla பிடிக்குதோ என்னவோன்னு" கலாய்க்கிறான். ஆனால் அப்படியொன்றும் இல்லை

நீங்க வேனும்னா கீழே கொடுத்துள்ள Link கில் போய் Lonely கேட்டுப்பாருங்க.

http://www.youtube.com/watch?v=wWMWRWYJqfg

ஒரு வேளை நீங்களும் அப்படிச் சொன்னால்...
வேற வழியில்லை...
ஒத்துக்கத் தான் வேனும்.

9 கருத்துகள்:

 1. 'Thanimaiyalan' na enna? Lonely na 'Thanimai' nu thaana artham?

  Bachelor life la adhaan indha paatu ivlo pudikudhu....idhaye konjam kalyaanathuku apram yosichu paaru....

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. Actualla he is meant as Mr.Lonely.
  So adhoda thamizaakkam than த‌னிமையாள‌ன்

  மேலும் Idhu bachelorkaana thanimai mattum illai…
  Idhu adhaiyum thaandi...
  punidhamaanadhu... (3 times)

  பதிலளிநீக்கு
 4. Praveen!
  Good writeup!
  Do continue your writing.
  I think the lack of comments would have discouraged you but do not worry about it.
  I admire your writing style - esp.
  //அதாவது ஒரு நெரிசலான செனகல் தெருவில் இவரை அப்படியே பேர் சொல்லி அழைத்தால், "என்ன சார்... கூப்பிட்டீங்களா ன்னு" ஒரு பத்துபேராவது திரும்பிப்பார்க்கக் கூடும். //
  //நல்லா இருந்தா தமிழாளுமை... Not upto the Mark ன்னா சோதனை முயற்சி)
  //
  These type of usages are good. Do frequent your posts!

  Venkatramanan

  பதிலளிநீக்கு
 5. அதாவது ஒரு நெரிசலான செனகல் தெருவில் இவரை அப்படியே பேர் சொல்லி அழைத்தால், "என்ன சார்... கூப்பிட்டீங்களா ன்னு" ஒரு பத்துபேராவது திரும்பிப்பார்க்கக் கூடும். எதற்கு வம்பு... நாம் Akon என்றே அழைப்போம்.
  //

  idhu neengaLa..?

  பதிலளிநீக்கு
 6. Thanimayalaan - good translation.

  I have never heard about AKON! Will try to hear his songs.

  Anyway, its a good thing as at the end, I will come to know about ten NEW musicians (Hope you wont include Deva and Illayaraja in the list :D )

  பதிலளிநீக்கு
 7. Seems senegal is a breeding ground for singers.Try 'Tete' once.

  The translation is good ; However i prefer economical use of words. The lesser the words more powerful the translation.

  Eg:
  http://songnlyrics.blogspot.com/2006/01/lukka-chhupi.html

  Looking forward for rest of the list.

  பதிலளிநீக்கு
 8. பதிவு படித்து தேடியதில் Akon ன் சில பாடல்கள் கிடைத்திருக்கின்றன பிரவீன்...குதியாளம் போடவைக்கின்றன...
  பத்துப்பாட்டு பாதியிலேயே நிற்கிறதே...
  தொடர்ந்து இசை குறித்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
 9. நினைவு படுத்தியதற்கு நன்றி ரௌத்திரன்

  மீண்டும் ஆரம்பிக்கிறேன் :)

  பதிலளிநீக்கு