1.
காதலால் ஏவாள்
கடித்ததால் தான்
ஆப்பிள் இன்னும் இனிக்கிறதோ !
2.
நீ கசக்கினாலும் இருக்கட்டும்நான்
உன் கைக்குட்டயாகவாவது இருக்கிறேன்
3.இந்த வலி
எனக்கு பிடிதிருக்கிறது
காரணம்இது நீ தந்தது !
4.
நான் உன் சிகரட் - என்னை
உதடு சுடும் வரை குடி
நான் உன் நகம் - என்னை
காயமாக்கும் வரை கடி
நான் உன் நினைவு - என்னை
மறக்கும் வரை நினை
நான் உன் இதழ்கள்
உலர உலர என்னை ஈரப்படுது
நான் உன் கைக்குட்டை என்னை
நனையும் வரைத் துடை
நான் உன் கேசம்
நேசத்தோடு என்னை கோது
நான் உன் மனசாட்சி
என்னைக் காதலிப்பதாகச் சொல் !!
வியாழன், 29 ஜூன், 2006
காதலால் ஆதலால்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//நான் உன் நினைவு - என்னை
பதிலளிநீக்குமறக்கும் வரை நினை
நான் உன் இதழ்கள்
உலர உலர என்னை ஈரப்படுது
நீ கசக்கினாலும் இருக்கட்டும்நான்
உன் கைக்குட்டயாகவாவது இருக்கிறேன்//
அழகிய சிந்தனைகள் கவித்தோரணங்களாக !! அழகு ப்ரவீன் :)
Fantastic..
பதிலளிநீக்கு