இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

பதேர் பாஞ்சாலி - The 'Ray' of Hope

*********
"I was a school boy then. It was an excursion. I saw there was a young english man, with no shirt, givin commands around. He had something around his neck that amused me, which years later I found out that it was a 'view finder'. Once everything is set, he said "Ready" and everyone was ready. He then said "roar" and there was roar of wind!. It was considerably a sunny day, Then he said "Rain" and you won't believe it rained!!!. I started shivering. When 'h-e' said "Rain", it rained...I thought he should be 'GOD'. Then I came to know that it was a cinema shooting of 'The Bridge on the River Kwai'.

Thats the day I decided, 'One day I will say "Rain" and it will rain'.... It Rained one day!"

Director Balu Mahendra (in an interview)
**********
"Sathyajit Ray Paints his movie"

Akira Kurosawa
**********

"உத்கல ஜலதித ரங்கா" "வைஷ்ணவ ஜனதோ" போல "பதேர் பாஞ்சாலி" என்ற பெங்காலிச் சொல்லும் அர்த்தம் தெரியாமலே நாம் பாராட்டும் ஏதோ தேசியப் பண் என்று தான் சிறு ப்ராயத்தில் நம்பி வந்தேன்.

அதன் புகழைக் குறிப்பிவதற்காக இதைச் சொல்கிறேன். மற்றபடி தேசிய உணர்வு சகோதரர்கள் அப்படி சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாம்.

ஏறத்தாழ எல்லா வளர்ந்த குடிமகனும் இந்த படத்தைப் பற்றி கேட்காமலோ பார்க்காமலோ இருந்திருக்க முடியாது. (அப்படி கேள்விப்பட்டிருக்காவிட்டால் அதற்கான முயற்சியாகக் கூட இதை எடுத்துக் கொள்ளலாம்). சுதந்திர இந்தியாவிலிருந்து வெளிவந்து அகில உலக அங்கீகாரம் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. உலக சினிமாவியலாளர்களால் கண்விரிய இந்தியாவைப் பார்க்க வைத்த படம் என்று சொல்லலாம். இத்திரைப்படம் சர்வதேச விருதுகளைக் குவித்த போதிலும் 'பல நூற்றாண்டுகால அடிமை வாழ்கையில் முற்றிலுமாக உறுஞ்சிவிடப்பட்ட இந்த வெறும்பயல்கள் என்ன சினிமா எடுத்திருக்கப் போகிறார்கள்' என்று பார்த்தவர்களும் உண்டு. "ஒரு Hollywood படத்தின் ரஃப் கட்டிற்குக் கூட தேராது" என்று கூட சொன்னார்கள். தொடர்ந்து வந்த ரே போன்றோரின் படங்கள் இந்திய சினிமாவுக்கான நிலையான நன்மதிப்பை உலக அரங்கில் ஏற்படுத்தியது.

இந்திய கிராமங்களில் சபிக்கப் பட்டிருக்கும் விளிம்பு நிலை வாழ்கையை மேற்கொண்டுள்ள ஒரு சிறிய குடும்பத்தைப் பற்றியது தான் பதேர்பாஞ்சாலி நாவலின் கதை. சோற்றுக்கு வழி இல்லா விட்டாலும் பரம்பரை, சொந்த ஊர், சொந்த கோமணம் என்று அழுகிப் போன கட்டமைப்புகளில் ஒட்டி உறுஞ்சும் நிலைப்பாடு.

இழந்த சௌகர்யங்களையும் நாளைய கவலைகளையும் தினசரி பற்றாக் குறைகளையும் முழுமையான ஏற்புடைமையோடு எடுத்து வாழும் அம்மா...


முன்னோர்களின் பெருமையின் காரணமாக ஒரு சிறிய அடி நிலை ஊழியம் பார்க்கும் அப்பா. மூன்று மாத சம்பள பாக்கியைக்கூட கேட்டால், எங்கே இருக்கும் வேலையும் போய்விடுமோ என்று அஞ்சிப் பிழைக்கும் பஞ்ச வாழ்கை.

கவணிக்க ஆளின்றி மரணத்தை எக்கணமும் எதிர் நோக்கி காத்திருக்கும் வயசான உறவுக்கார மூதாட்டி அத்தை இந்திர். அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சகித்துக்கொண்டு, Shakespeare சொல்வதைப்போல இரண்டாம் குழந்தைப் பருவத்தில் வாழ்கிறாள் அவள்.

இவைகளுக்கு மத்தியிலும் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கள் உலகத்தில் மகிழ்ச்சியாக சுற்றியலையும் துர்கா மற்றும் சிறுவன் அப்பு. வறுமையின் காரணமாக நிராகரிக்கப்பட்ட இனிப்புகள், புது உடைகள், நல்லுணவு எதுவும் அவர்கள் மகிழ்ச்சியை சீர்குலைப்பதில்லை. மாறாக தங்கள் கிராமத்த்திலிருந்து எங்கோ தொலைவில் ரயில் தண்டவாளம் உள்ளதும், அதன் மீது செல்லும் ரயில் தங்கள் ஊரைக் கடக்கையில் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதும் தான் அவர்களுடைய அதிக பட்ச விருப்பமாக இருந்தது.

சுதந்திர இந்திய கிராமத்தின் நிதர்சணத்தைக் காட்டியதற்காக கடுமையாக விமர்சிக்கப் பட்டது இத்திரப்படம். இவ்வளவு பிரகாசமாக மின்னும் இந்த திரப்படத்தின் பின்புலத்தில் பலரது வேர்வைகளும், கண்ணீரும் வேடிக்கைகளும் நிறைந்துள்ளது.

1949ம் ஆண்டு River என்ற திரைப்படத்தை இந்தியாவில் எடுத்துக்கொண்டிருந்த ழான் ரினோரிக்கு சில கிராமப்பிற லொகேஷன்களைக் காண உதவி வந்தார் ரே. அப்போது பதேர்பாஞ்சாலியைப் படமாக்கும் தனது எண்ணத்தை தெரிவித்தார். ழான் அதற்கு பெரிதும் உற்சாகப்படுத்தினார். இருப்பினும் திரைப்படம் பற்றிய எவ்வித அனுபவுமற்ற ரேவுக்கிற்கு அதை சாத்தியமாக்கும் வழி பிடிபடவில்லை என்று தான் சொல வேண்டும்.

1950ம் ஆண்டு பணி நிமித்தமாக 6 மாதம் லண்டன் சென்றார் ரே. சர்வதேசத் திரைப்படங்களை இந்தியாவிலே காண வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், அந்த காலகட்டத்தில் சுமார் 99 திரைப்படங்களை லண்டனில் பார்த்துள்ளார். அதில் இத்தாலிய நியோ ரியலிச பைசைக்கிள் தீவ்ஸ் பார்த்து விட்டு திரை அரங்கத்தைவிட்டு வெளிவரும் போது தான் "நாம் உறுதியாக இயக்குனராக வேண்டும்" என்று நிர்ணயித்துக் கொண்டதாக கூறுகிறார் ரே. சராசரி மனித வாழ்வின் ஊடாக சினிமாவைச் செலுத்த முடியும்; அமச்சுர் கலைஞர்களை வைத்துக் கொண்டும் சிறந்த படங்களைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அத்திரைப்படம் அளித்திருக்க வேண்டும்.

ஒரு வழியாக 1952ல் துவங்கிய பதேர் பாஞ்சாலி படப்பிடிப்பில் பங்குபெற்றது பெரும்பாலும் first-timers.உதாரணத்திற்கு ரே அதுவரை ஒரு திரைப்படத்தை இல்லை... எதையுமே இயக்கியது கிடையாது. படத்தின் ஒளிப்பதிவாளர் அதுவரை ஒரு படப்பிடிப்பு கேமராவைத் தொட்டதே கிடையாது. துர்காவின் அம்மாவாக ஒரு அமச்சுர் நாடக நடிகையாக இருந்துவந்த ஒரு நண்பரின் மனைவி நடித்தார். துர்காவும் ஒரு நாடக கலைஞராக இருந்தார், அப்பு கதாபாத்திரத்திற்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப் பட்டும் திருப்த்திகரமான முகம் அமைவில்லை. கடைசியில் ரேவுடைய மணைவி அருகாமையில் வசிக்கும் ஒரு சிறுவனையே அப்பு கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார். பெரும் சவாலாக இருந்தது மூதாட்டி இந்திர் கதாபத்திரத்திறகான தேர்வு தான். இறுதியில் வேசிபுறத்தில் தங்கிவந்த ஓய்வு பெற்ற நாடக கலைஞர் சுனிபாலதேவியைத் தேர்ந்தெடுத்தார்கள். மற்ற கலைஞர்கள் படப்பிடிப்பி நடந்த கிராமத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப் பட்டனர்.



படப்பிடிப்பு துடங்கியதிலிருந்தே படத்தயாரிப்புக்கான குறைபாடுகள் இருந்துவந்தே தான் இருந்தது. படத்தைத் தயாரிக்க யாரும் முன் வராத நிலையில், சில ஃபூட்டேஜ்களை எடுக்க தொடர்ந்து ரே டிசைனராக பணிபுரிந்து வந்தார். தன்னுடைய ஆயுள் காப்பிட்டை அடகு வைத்து பணம் கடன் வாங்கினார். அItalicதுவும் பத்தாததால் தன்னிடமிருந்த பெரும் LP ரெகார்டுகளை விற்றார். ரே வின் மனைவியை சமாதானம் செய்து அவரது நகைகள் அனைத்தையும் பணையம் வத்தார். இது எல்லாம் இருந்தும் ஏற்பட்ட பணப்பற்றாக் குறையினால் படப்பிடிப்பு சுமார் ஒரு வருடம் தடைபட்டுப் போனது.

அதன் பிறகு படம் அங்கும் இங்குமாக துண்டு துண்டாகவே அவரால் எடுக்க முடிந்தது. படப்பிடிப்பு தாமதம் அவரை மிகவும் வருத்தத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். அப்போது தான் மூன்று அதிசயங்கள் நடந்ததாக பின்னாளில் வேடிக்கையாக‌ குறிப்பிடிகிறார் ரே. ஒன்று அப்பு வின் குரல் உடைந்துவிடவில்லை; இரண்டு துர்கா பெரிதாக வளர்ந்துவிடவில்லை; மூன்று இந்திர் மண்டையைப் போடவில்லை!


அப்போது இந்தியாவில் தங்கியிருந்த Museum of Modern Arts சின் அதிகாரி ரேவின் அரைகுறை சுருள்களைப் பார்த்துவிட்டு இதை MoM Exhibition ல் திரையிடலாம் என்று நம்பிக்கை ஊட்டினார். அந்த உற்சாகத்தில் மீண்டும் மும்மரமாக பணியில் ஈடுபட்டார். நல்லவேளையாக MoM மூலமாக கொஞ்சம் பணமும் கிடைத்தது. மேலும் அப்போதைய முதலமைச்சரை மிகவும் வற்புறுத்தி பதேர்பாஞ்சாலியின் அரைகுறை சுருள்களைக் காண்பித்தபோது அவர் அதில் மிகவும் ஈர்க்கப்பட்டு ரே படத்தை முடிப்பதற்கு உதவுவதாக கூறினார். அவருக்கு சாலை மேம்பாடு நிதியிலிருந்து லோன் வழங்கப்பட்டது. மாநில அரசு அது கிராமப்புற மேம்பாடுக்காக எடுக்கப் பட்ட டாக்குமென்ட்ரி என்றே நம்பிவந்தது. ஒரு வழியாக 3 வருட படப்பிடிப்புக்குப் பிறகு படம் வெளியாக தயாரானது.

ஆரம்பநிலை வரவேற்பின்மை ரேவிற்கு பெரும் வருத்ததை அளித்தது. தானே விளம்பரத்திற்காக போஸ்டர்கள் தயாரித்தார். நியான் விளக்கில் அப்புவும் துர்காவும் ஓடுவது போல வடிவமைத்து கல்கத்தாவின் முக்கிய சாலைகளில் வைத்தார். ஒருவழியாக செவிவழி விளம்பரத்தினால் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வந்தது பதேர்பாஞ்சாலி. சர்வதேச அரங்குகளிலும் வெளியிடப்பட்ட பதேர்பாஞ்சாலி பெரும் வரவேற்பைப் பெற்றது. உதாரணமாக ந்யூயார்க்கில் Fifth Avenue Playhouse சில் 8 மாதங்கள் தொடர்ந்து ஓடியது. இந்தியாவில் 'வெற்றிகரமாக' ஓடிய தோ 7 வாரங்கள்!.

Times of India நாளிதழ‌ல் "இதை மற்ற இந்திய சினிமாவோடு ஒப்பிடிவது அபத்தமானது" என்று குறிப்பிட்டது. வங்காள முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு திரையிடலில் இப்படத்தைப் பார்த்த பிரதமராக இருந்த ண்டிட் நேருவை வெகுவாக கவர்ந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட போது அவ்வருடத்தின் Best Human Document விருதைப் பெற்றது. இன்று Slumdog millionare படத்தை விமர்சிப்பது போல "Exporting India's Poverty"என்று சிலர் விமர்சித்த போதும், அதைத் தொடர்ந்து பதேர்பாஞ்சாலி குவித்த தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் ஏராளம் ஏராளம்.

எத்தனையோ போரட்டங்களுக்குப் பிறகும் இப்படத்தை எடுக்க உதவியது பலருடைய பண உதவி மட்டும் அல்ல... சத்யஜித்ரே கொண்ட ஒரு கனவும்.... அதன் மீது அவர் வைத்த நம்பிக்கையும் தான். பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!.



இந்த காலகட்டத்தில் வருத்தமளிப்பது என்னவென்றால்...'பதேர்பாஞ்சாலி' போன்ற ஒரு நல்ல படத்தை எடுப்பதற்கு அப்போது இருந்த எல்லா நெறுக்கடிகளும் இப்போதும் ஒரு நல்ல படம் எடுப்பதற்கு உண்டு என்பது தான். அப்போது பொருளாதாரம் தடையாக இருந்தது. இப்போது படப் பொருளின் ஆதாரம் தடையாக உள்ளது. வருமான விருத்திக்காக மட்டும் என்று ஆகிவிட்டு, எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் வெளியிடப்படும் திரைப்படங்களும், தொடர்ந்து ரே வுக்கு அடுத்து விழுந்த பெரிய இடைவெளியும் இந்திய சினிமாவுக்கான உலக அங்கீகாரத்தை அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. இன்றைய இந்திய சினிமா பற்றிய உலகப் பார்வை எப்படி இருக்கிறது "ஓ...உங்கள் படமா... நிறைய பாடல்களும், நடனமும், மிகுந்த வண்ணமுமாக இருக்குமே...! " என்று தான் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சொல்லிக் கேட்கிறேன்.

இந்தியாவை மையமாக வைத்து வருடத்திற்கு ஒருபடமாவது Hollywood டில் தயாரிக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப் பட்ட Slumdog millionare படம் 4 Golden Globe விருதுகள் பெற்று, 10 Oscar விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டிருகிறது. இவ்வளவு நாள் அந்த கதை 'இங்கு' தானே இருந்தது?

உலகத்துக்கான இந்திய சினிமாவுக்கு நல்ல துவக்கத்தை அளித்த ரே வைத்தொடர்ந்து மிகச்சிலரே அந்தப் பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மீராநாயர், தீபா மேத்தா, இதோ வந்துவிட்டார் எங்கள் அண்ணன் அமீர் என்று கைவிட்டு எணிவிடலாம். மீண்டும் ஒரு ஆரோக்கியமான தரமான இந்திய சினிமா சமூகம் உருவாகும் சூழல் தற்போது இருந்துவருகிறது. அதை கட்டிப்போடுவதும் கைதூக்கிவிடுவதும் ரசிகர்களான பொதுமக்களிடமும், திரைப்படக் கலையைச் சார்ந்தவர்களின் பொறுப்புணர்ச்சியிலும் தான் உள்ளது. ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக்கையும் போல நாமும் நம்பிக்கை கொண்டிருப்போம்.

Definitely there is a 'Ray' of Hope!!

9 கருத்துகள்:

  1. இந்தியாவின் இரண்டாம் ஆஸ்கர் விருது பெற்ற ஒரு கலைஞ்ஞனின் முக்கியமான ஒரு திரைப்படத்தின் உந்துதலில் எழுதிய இந்த கட்டுரைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    மேலும் இவருடைய எல்லா திரைப்படங்களையும் (கிட்ட தட்ட 15 )அடுத்த முறை அப்டன் பூங்கா வரும் போது உங்களுக்கு பரிசளிக்க போகிறேன்......
    கவலை படாதீர்கள் பிரவீன். தமிழ் சினிமா இன்று கொஞ்சம் கொஞ்சமாக பழைய மரபுகளை கட்டுடைத்து கொண்டு இருக்கிறது..அதன் விடி வெள்ளிகளாக திரு பாலுமகேந்திராவின் சிஷ்ய பிள்ளைகள் இயக்குனர் பாலா, அமீர், சசி குமார், ராம் மேலும் பல இயக்குனர்களும் அதற்கான முயற்சியில் இருப்பார்கள் என நம்புவோம்.
    அல்லது நாமும் அளத்தில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதையும் செய்வோம்...காலம் கட்டாயம் அதுவானால் அதையும் செய்வோம்

    பதிலளிநீக்கு
  2. //அல்லது நாமும் அளத்தில் குதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதையும் செய்வோம்...காலம் கட்டாயம் அதுவானால் அதையும் செய்வோம்// பாலா! இங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்களா? :-)

    ப்ரவீன்!
    எனக்கொரு குறையிருக்கிறது - ரே போன்றவர்கள் உண்மையிலேயே நல்ல எண்ணத்துடன் (அடித்தட்டு மக்களின் நிலை மேம்படவேண்டும் என) திரைப்படங்கள் எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால் இன்று (SM உட்பட), வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் திரைப்படங்களுக்கிருக்கும் சர்வதேசச் சந்தையை தெளிவாக குறிவைத்து நெகிழ்ச்சி, அழகியல் பூச்சுக்களுடன் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது! இதுதான் வருத்தம். இடுகை நல்லயிருந்தது. நான் ஃபிப்ரவரி 28 தாயகம் (!!) திரும்பறேன்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  3. // ரே தனது பதேர்பாஞ்சாலி மீது கொண்ட கனவும், நம்பிக்கையும் போல நாமும் நம்பிக்கை கொண்டிருப்போம்.//

    ரே வின் படங்கள் இதுவரைக்கும் எதுவும் பாக்கலைங்க.நான் எப்பவும் கேசட்வாங்குற கடைல இந்தமாசம் எப்படியும் புடிசுத்தறேன்னு சொல்லிருக்காரு கண்டிப்பா பாக்கவேண்டிய படம் இது.

    அப்படியே அடுராரின் Four women கெடச்சாலும் பாருங்க.

    பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  4. @venkatramanan

    /பாலா! இங்க ஸ்மைலி போட மறந்துட்டீங்களா? :-)//

    நல்ல நையாண்டி

    நீங்கள் தெரிவித்த குறைக்கு...


    என்ன தவறு இருக்கிறது?

    இது ஒரு வர்த்தகமும் தானே? அழகியல் இருக்கிறது, உலகுக்கு சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றது, குறைந்த சம்பள திறமைகள் இருக்கிறது... அவன் வந்து வர்த்தகம் செய்கிறான்.

    நம்ம ஆட்கள் வெளிநாட்டிற்கு சென்று படம் பிடிக்கிறார்கள்... கதைக்காகவா? தயாரிப்பாளர்கு ஏதோ நம்பளால் ஆன மொய்க்கணக்கு அவ்வளவு தான்.

    NameSake என்று ஒரு படம் பார்த்தேன். அமரிக்காவிற்கு புலம் பெயர்ந்து போகும் ஒரு பெங்காலி தம்பதின் கதை. அவர்களது பிள்ளைகளின் வாழ்கையும், அவர்களது கடைசி காலமும் எப்படி உருமாரிப் போகிறது என்பதைக் காட்டும் அழகான திரைப்படம். தபு மற்றும் இர்ஃபான் கான் நடித்திருந்தார்கள். இந்த கதைக்கு அமரிக்கா அவசியப்பட்டிருக்கிறது...

    SM demanded India. City of God கதையை அந்த பூமியில் தான் சொல்ல முடியும். அதற்காக தென்னமரிக்க சேரி மக்களின் வாழ்கையை பணத்துக்காக Exploit செய்கிறார்கள் என்று சொல்லி ஞாயம் இல்லை...

    When Story Demands!!! எதுவுமே தப்பில்ல‌ :P

    பதிலளிநீக்கு
  5. நன்றி கார்திக்.

    அடூர் சாருக்கு நான் தாழ்மையான ரசிகன். மலையாளம் தாய்மொழியாய் அமைந்த காரணத்தால், Subtitle இல்லாமலே அடூரின் படங்களை பார்க்கும் அதிஷ்டம் எனக்கு உண்டு.

    'நாலு பெண்ணுகள்'(four women-malayalam title) என்னிடம் உள்ளது. நல்லதொரு பொழுதில் பார்ப்பதற்காக வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. Hi Praveen,

    Balumahendra's story doesn't seem to be true. I think its rather a romanticised version of his childhood experience! As if he was dumbstruck whether God himself came alive and created rains! But I dont understand why these people in cinema and literature lie like this( If I can use that word). He could've said that he was inspired by the Director's ability to recreate and control events(scenes). But I think his mind is trained in creating dramas out of incidents!

    Also I always wanted to point a thing I observed in many writers including you is the extensive usage of 'English' tamil. I.e Phrases that are pure translations from English and not natural tamil. Ofcourse, in this modern age, such an intermingling of languages is unavoidable. But still many times, things get to a level where its like reading junoon dialogues :). Maybe its because of ppl thinking extensively in english. I can quote some from ur article too.

    "Vilimbu nilai vazhkai"

    "Adi nilai oozhiyan"

    "Kattamaippugal"

    "pinpulam"

    Let me make it clear I am no expert in literature. So any mistakes in the above views need to be pardoned :) . Also in "பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!. " , it shd be 'Thesathin' right? if its not right then i am missing things because i dont think if 'Pather..' is related to nationalism.

    As regards to the subject of the article, there is nothing to add to it as you've put it quite well. Even I am hoping more directors of his kind! Eppo Amir ungalukku annan aanaaru? Rameswarathula political speech pannadulernda. Illa courtla balti adichadulernda??

    Regards,
    Ranga.


    P S : Is Bala missing in ur list of promising directors??

    பதிலளிநீக்கு
  7. Very Good...

    Very good challenging Comments... You can potentially become a good critic :)

    I am so elated to answer you...

    Reg your first paragraph:

    That is what Creators are all about. To show ordinary events extraordinarily and beautiful. But without changing or exhaggerating the truth. "Kavithaikku Poi Azhagu!" keattadhillayaa?.



    "கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்"

    Poi thaan... keakka sugamaa irukilliyaa?? Unmayaavey ippidi oru ponnu vandhaa sppidi irukkumnu imagine panni paakavey mudiyala... Nee soldra madiri 'I am inspired by __ and __" nnu Balumahendra pathi yaaravadhu sollum podhu sollikuvanga. But Balumahendravey sollum podhu avar appidi thaan solluvaar. Eppavum uankku 10 varushathukku munnadi nadandha nalla vishayatha nee imagine panni paar. Adhu Poeticaa thaan irukkum:)

    IInd paragraph:

    Naan idha romba adarikkiren. Naama englishoda equivalent or translated vaarthaikalai use pandrom. But tamil-la ezudhurom. Appidi dhaan oru mozi valaranum. Ennoda scope idhu thaan - naan idhukku mela valara mattennu sonna adhu koodiya seekiram extinct ayidum. Pala indian languages-la Bus - Bus dhaan, hindi layum Bus dhaan, kannadathulayum Bus dhaan. Malayalathulayum Bus dhaan. Namakku mattu, dhaan perundhu, sitrundhu ellam irukku. vilimbu nilai vaazkai, pin naveenathuvam elaam irukka vendiyadhu thaan. Ennaik keattaal idhuvum pathaadhu.

    Nee sonna madiri English use pandrada avoid pandradhu kashtam dhaan. nearly 200 years of Slavery.. India has not completely recovered from a British colonialism culturally. Englisha- chumma po...appidinna poidaadhu...

    /"பதேர்பாஞ்சாலி ஒரு தனி மனித வெற்றியையும் கடந்து, ஒரு தேசியத்தின் அடையாளம்!. " // Yes othukkaren. Nee soldradhu correct thaan. "Poo-va Poo-vunu sollalaam. Pui-ppam nnum sollalaam. Neenga soldra madiriyum sollalamney" :P

    Reg Amir: No No... Avaroda Rameshwaram, bulty elaam enakku theriyaadhu.... "Paruthiveeran" vachu soldren. Adhu ulagathukaana tamil cinema. It got recognized in various International Film festivals Cannes and Berlin to my knowledge. Bala-va naan venumney thaan include pannala... Bala Sedhu-kku appuram oru nalla padam kudukala-ndradhu thaan ennoda strong-ana abiprayam. Avan create pandra characters ulaga tharam vaaindhavai... But avanoda padam...enakku irandaam tharam dhaan. (enakku-nnu dhaan sonnen!).

    பதிலளிநீக்கு